சென்செக்ஸ் 765 புள்ளிகள் நிப்டி 225 புள்ளிகள் உயர்வு

30-08-2021 07:18 PM

மும்பை/புதுடெல்லி, ஆகஸ்ட் 30,

இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று பங்கு விலைகள் கணிசமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தின. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 765 புள்ளிகளும் டெல்லி தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 225 புள்ளிகளும் என்று உயர்ந்தன.

சென்செக்ஸ்

ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை வர்த்தகத்தில் இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் அதிகாரப்பூர்வ குறியீடாக சென்செக்ஸ் 765. 04 புள்ளிகள் உயர்ந்து 56958 .27 ஆகியவற்றில் நிலைபெற்றது இந்த உயர்வு மொத்தத்தில் 1.36 சதவீதம் ஆகும்.

வர்த்தக காலத்தின்போது சென்செக்ஸ் இன்னும் கூடுதலாக 16931.05  புள்ளியில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

நிப்டி

டெல்லி தேசிய பங்குச் சந்தையில் அதிகாரபூர்வ குவிட் ஆகிய நிதி இன்று 225 85 புள்ளிகள் உயர்ந்து 16931.05 புள்ளிகளில் நிலைபெற்றது இன்றைய உயர்வு சதவீதம் 1.35 ஆகும்.

சென்செக்ஸ் குறியீட்டு க்கான 30 நிறுவனங்களில் மிக அதிகபட்சமாக 4 சதவீதம் லாபம் அடைந்தது ஏர்டெல் நிறுவனம் ஆகும் அதுதவிர ஆக்சிஸ் டாட்டா ஸ்டீல் டைட்டான் மாருதி பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் உயர்வடைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் இழப்பைச் சந்தித்தவை டெக் மஹிந்திரா நெஸ்டில். இன்ஃபோசிஸ். டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் ஆகும்.

உலக அளவில் பங்குச் சந்தைகளில் இன்று ஏற்றம் நிலவியது அதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து ஏற்றத்தை பெற்றன என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஆசியாவில் உள்ள ஷாங்காய் ஹாங்காங் டோக்கியோ சீயோல் ஆகிய நகரங்களில் உள்ள பங்குச் சந்தைகள் இன்று லாபம் அடைந்தன.

ஐரோப்பிய யூனியனில் உள்ள பங்குச் சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தின் போது உயர்வை வெளிப்படுத்தின.

உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை 0.20 சதவீதம் குறைந்தது. இன்றைய ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 71.56 டாலராகும்.Trending Now: