பிரதமர் அலுவலகத்திலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா

02-08-2021 04:22 PM

புதுடில்லி,

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த ஐஏஎஸ் அதிகாரி அமர்ஜித் சின்ஹா தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் 7 மாதங்கள் இருக்கும் பொழுது ராஜினாமா செய்துள்ளார்.

அமர்ஜித் சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி 1983ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார் அவருடைய பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு முடிவடைந்தது மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை செயலாளராக இருந்தபொழுது அவர் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவர் 2020 பிப்ரவரி மாதம் அலுவலகத்தில் சமூக துறைகள் பற்றிய விவரங்களை கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகாலம் அவர் பதவியில் இருப்பார் என்று அவரது நியமன ஆணை குறிப்பிடுகிறது.

2 ஆண்டு முடிய இன்னும் 7 மாதங்கள் இருக்கும் பொழுது திடீரென்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

அமர்ஜித் சின்ஹா பதவியை ராஜினாமா செய்ததை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உறுதி செய்தனர்.

ஆனால் அமர்ஜித் சிங் ஏன் பதவியை ராஜினாமா செய்தார் என்ற தகவலை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்யும் மூன்றாவது உயர் பொறுப்பில் உள்ள அதிகாரியாக அமர்ஜித் சின்ஹா இருக்கிறார்.

அவருக்கு முன்னதாக பிரதமரின் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய மிஸ்ரா 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்குப்பின் பிரதமர் அலுவலகத்தில் முதன்மை ஆலோசகராக இருந்த விக்கி சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார் மத்திய அமைச்சரவை செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கி சின்ஹாவை பிரதமர் அலுவலகத்தில் நியமனம் செய்வதற்காகவே புதிதாக பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

 மூன்றாவதாக ஐஏஎஸ் அதிகாரி அமர்ஜித் சின்ஹா இப்பொழுது தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.Trending Now: