கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க. தமிழகத்தில் ஆகஸ்ட் 5 முதல் பயணக் கட்டுப்பாடுகள் - அமைச்சர் அறிவிப்பு

02-08-2021 03:44 PM

சென்னை, 

ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் இருந்து விமானம், ரயில். சாலை வழியாக தமிழகத்துக்கு வரும் கேரள பயணிகள் தங்களுடன் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சோதனை முடிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்குள் நுழைய முடியும் என்று தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

கேரளா -  தமிழக எல்லையில் வருவாய்த்துறை மருத்துவத் துறையினர் காவல் துறையினர் ஆகியோர் இணைந்த அணியினர் வெளிமாநில பயணிகளின் ஆவணங்களை பரிசோதிப்பார்கள் பயண ஆவணங்களில் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

அச் சான்றிதழ் இல்லாவிட்டால் தமிழகத்தில் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது.

வெளிமாநில பயணிகள் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் பெற அவர்களுக்கு அவகாசம் தேவை என்பதால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களிலும் வெளிமாநில பயணிகளுக்கான சோதனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

கேரள மாநிலத்தில் கொரானா வைரஸ் தொற்றுக்கள் சென்ற வாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதனால் தான் தமிழக அரசு தனது எல்லையிலும் சோதனைகளை முடித்து விட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் அந்த சான்றிதழை காண்பித்தாள் அவர்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் ரெண்டாவது தடுப்புசி ரோஸ் 2 வாரங்களுக்கு முன்னர் போட்டிருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப சோதனை உடன் ஆர்டிபிசிஆர் சோதனையும் விரைவில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

கர்நாடகத்தில் கண்டிப்பு

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு நுழைய விரும்பும் பயணிகள் தங்களுக்கு குரானா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் வெளிமாநில பயணிகள் கர்நாடகத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது வெளிமாநில பயணிகள் தங்கள் மாநிலத்துக்கு திரும்பிச் செல்லும்படி கூறப்படுகிறது.

ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கடந்த 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனை மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வரும் வர்த்தக பயணிகளுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.Trending Now: