த்ரில்லர் பட இயக்குனரோடு கூட்டணி அமைக்கவிருக்கும் ஆர்யா...

02-08-2021 12:39 PM

சமீபகாலமாக ஆர்யா படங்களுக்கு நல்ல மார்கெட் உருவாகிவருகிறது. மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை என வரிசையாக படங்கள் நல்ல விமர்சனத்தையும் வெற்றியையும் பெற்று வருவதால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

 இந்த கொரோனா காலத்தில் தியேட்டரை விடவும் ஓடிடி தளங்களே சினிமா துறைக்கு கைக்கொடுத்தது, ஆர்யாவின் கடைசி இரண்டு படங்களும் டிஜிட்டல் தளத்தில் தான் வெளியாகி ஹிட்டானது. தற்போது வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் ஆர்யாவும் அந்த பாதையில் செல்ல முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.Trending Now: