இன்று இரவு வெளியாகவிருக்கும் ‘வலிமை’ படத்தின் சிங்கிள்...

02-08-2021 12:35 PM

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாரகிக் கொண்டிருக்கும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஆக்‌ஷன் படமான இது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்று இரவு 10 மணியளவில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாகவிருக்கிறது. இது யுவன் முன்பே கூறிய அம்மா செண்டிமெண்ட் பாடலாக இருக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.Trending Now: