டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: இந்திய மகளிர் அணி செமி பைனலுக்கு முன்னேறியது

02-08-2021 11:28 AM

டோக்கியோ 

இந்திய மகளிர் ஹாக்கி அணி 3 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வாங்கிய ஆஸ்திரேலிய அணியை இன்று தோற்கடித்து செமி பைனலுக்கு தகுதி பெற்றது.

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறி இருப்பது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய அணி இறுதி போட்டியில் வெற்றி பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று ஆஸ்திரேலிய அணியும் இந்திய மகளிர் அணியும் ஆடத் துவங்கும் பொழுது இந்திய அணிக்கு எதிரான பல்வேறு அம்சங்கள் பளிச்சிட்டன.

ஆஸ்திரேலிய அணி உலகில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது ஆனால் இந்திய அணி 9வது இடத்தில் உள்ளது.

இந்திய ஹாக்கி மகளிர் அணி இதுவரை செமி பைனலுக்கு கூட வந்ததில்லை.

ஆனால் துவக்கம் முதலில் இந்திய மகளிர் ஹாக்கி அணியை சேர்ந்த வீராங்கனைகள் உறுதியாக ஆடினார்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் அவர்கள் ஆட்டம் அமைந்தது ஆட்டம் துவங்கிய 22வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு ஒன்று கிடைத்தது அந்த நோய்க்கான வாய்ப்பை கோலாக குர்ஜித் கவுர் மாற்றினார்.

ஆட்டத்தின் போது வெற்றிகரமாக பயன்படுத்த தவறிய குர்ஜித் இன்று அதனை கோலாக மாற்றினார்.

இந்த ஒற்றைக் கோல் இந்திய அணிக்கு வெற்றி கோலாக மாறியது.

ஆஸ்திரேலிய அணி இடைவிடாமல் இந்தியாவுக்கு எதிராக போல் போடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இந்திய அணியினர் தவிடுபொடியாக்கினார்கள்.

அடுத்து செமி பைனல் ஆகஸ்ட் 4ம் தேதி அர்ஜென்டினாவை இந்திய மகளிர் அணி உள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி செமி பைனல் தகுதிபெற்றது.

49 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆடவர் அணியும், மகளிர் அணியும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்தியாவில் பெரும் சந்தோசத்தை தந்துள்ளது.Trending Now: