தனுஷின் ஹாலிவுட் பட ஷூட்டிங் வேலைகள் முடிந்தது...

01-08-2021 02:45 PM

கோலிவுட்டில் பிஸியாக இருந்து வரும் தனுஷ் அவ்வப்போது தமிழ் மொழி அல்லாது ஹிந்தி, இங்கிலீஷ் என படங்கள் நடித்து தனது மார்கெட்டை விரிவுப்படுத்துவதில் கவணம் செலுத்தி வருகிறார். இந்த லிஸ்டில் ஒரு தெலுங்கு படமும் தற்போது இணைந்துள்ளது. சேகர் கம்முலா இயக்கவிருக்கும் அந்த படத்திற்கு பிறகு தெலுங்கிலும் சில பட வாய்ப்புகள் தனுஷுக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அண்மையில் அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் ரூசோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி க்ரே மேன்’ பட ஷூட்டிங்கை முடித்து சென்னை வந்த தனுஷ் தனது 43வது படமான ‘மாறன்’ படத்தில் கவணம் செலுத்த துவங்கினார், இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இவருக்கான இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஹாலிவுட்டில் உருவாகிவந்த ‘தி க்ரே மேன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷுடன் க்ரிஸ் ஈவன்ஸ் மற்றும் ரயான் காஸ்லிங் இணைந்து நடித்துள்ளனர்.  விரைவில் தி க்ரே மேன் படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் துவங்கவிருப்பதால் படத்தின் டீஸர் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Trending Now: