ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சேர இணையத்தில் கல்விக்கண்காட்சி ஆக.1ம்தேதி நடைபெறுகிறது

26-07-2021 07:09 PM

சென்னை, 

ரஷ்யப் பல்கலைக்கழகங்களின் பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்பு வாய்ப்புகள்பற்றி இந்திய மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று www.rusedufair.com என்ற இணையதளத்தில் கல்விக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து ரஷ்யக் கூட்டமைப்பின் தென்னிந்தியாவுக்கான துணைத் தூதர். ஒலெக் என். அவ்தீவ் கூறியது. 

ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகக்கல்லூரியின் தலைவர் . விளாடிமிர் விச்காரின்  ரஷ்யாவின் கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தலைவர் அலெக்ஸி எஸ். சோஸினவ் , ரஷ்ய நாட்டின்இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் ஃபார் ஈஸ்டர்ன் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர்விக்டோரியா வி. பனோவா அறிவியல் மற்றும் கலாச்சாரபரிமாற்றத்துக்கான ரஷ்ய மையத்தின் (இயக்குனர் திரு. கென்னடி ஏ. ரோகலேவ்) மற்றும் ஸ்டடிஅப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் \நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்  சி ரவிச்சந்திரன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் மருத்துவமாணவர்களின் நேரடிப் பயிற்சிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும்மருத்துவமனைகளுடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக,மாணவர்களின் கல்வி மற்றும் பயிற்சியும், ஆராய்ச்சிப் பணிகளும் பாதிக்காத\வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.தற்போது அமலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்து ரஷ்யப்பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் ரஷ்யாவுக்குச் செல்லஅனுமதிக்கப்படும்போது, அவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசிகளும்செலுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும். அதோடு, கோவிட் ’19 பெருந்தொற்றில்இருந்து பாதுகாப்பு பெற, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள வழிமுறைகள்அனைத்தும் தவறாமல் கடைபிடிக்கப்படும்.

நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு உதவும் வகையிலும், ரஷ்யப்பல்கலைக்கழகங்களின் பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்பு வாய்ப்புகள்பற்றி இந்திய மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று www.rusedufair.com என்ற இணையதளத்தில் மெய்நிகர் கல்விக்கண்காட்சிக்கு (Virtual Education Fair) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தஇணையதளமானது மிகவும் வலுவான தகவல் பரிமாற்றத் திறன் கொண்டகட்டமைப்போடு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ரஷ்யக் கல்லூரிகளின்அதிகாரிகளோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறவும், தகவல்திரட்டவும், ரஷ்யா சென்று கல்வி கற்க விரும்புவோர் தங்களது பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளவும் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

2021-ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பில் சேர்ந்து கல்வி பயில\விரும்பும் இந்திய மாணவர்களை சேர்க்கும் பணியை ரஷ்யக் கல்லூரிகள் ஏற்கனவேதொடங்கிவிட்டன. பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் வரை, இந்தியமாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.இந்தியாவில் தற்போது எம்.பி.பி.எஸ்.என்ற பெயரில், வழங்கப்படும்மருத்துவப் பட்டப் படிப்பு, ரஷ்யாவில் எம்.டி.என்ற பெயரில் அந்நாட்டுப்

பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன. மருத்துவர் தகுதிக்கான இந்தப்பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் கற்க விரும்புவோர் 6 ஆண்டுகளும், ரஷ்யமொழியில் கற்க விரும்புவோர் 7 ஆண்டுகளும் கற்கலாம். 

ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோருக்கு சி.இ.டி. அல்லது ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற தகுதித் தேர்வுகள் எதுவும் தேவையில்லை.\மருத்துவக் கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களைப் பொறுத்தவரை, ‘நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

ஆனால், தற்போது நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும் என்று தெரியாத சூழலில் கல்லூரியில் சேரும்போது நீட் மதிப்பெண் சான்றிதழ் கேட்கப்படாது. எனினும், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நிறைவு பெற்று, மதிப்பெண் பட்டியல்கள்வழங்கப்படும்போது அதை பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்Trending Now: