சேனல் செய்திகள் - 07. 04. 2021

09-04-2021 12:33 PM

அசல்  எச்டி  அனுபவம்   குறித்த  விழிப்புணர்வு   பிரசாரம்!


எச்டி  தொழில்நுட்பத்தின்   உண்மையான  அனுபவம்  குறித்த  விழிப்புணர்வை  ஏற்படுத்தும்  வகையில்,  ‘காண்பிப்பதில்  மட்டுமல்ல, பார்ப்பதிலும்  அசல்  எச்டி  அனுபவம்  இருக்கிறது’ என்கிற  புதிய  பிரசாரத்தை  ஸ்டார்  இந்தியா  அறிமுகப்படுத்தியிருக்கிறது.     நாடு  தழுவிய  இந்த  டிவி  பிரசாரம்,  அசல்  எச்டி  அனுபவம்  குறித்த  விழிப்புணர்வை  டிவி  பார்வையாளர்கள்  மத்தியில்  உருவாக்கும்.

           எச்டி  டிவி  இருந்தாலே போதும்,   எச்டியில்  பார்க்கும்  முழு  அனுபவம்  கிடைக்கும்  என்கிற  தவறான  கருத்து  டிவி  பார்வையாளர்களிடையே  நிலவுகிறது.  ஆனால்,  இது  ஒரு  கட்டுக்கதை  என்பதை  காமெடியாக  சொல்லும்  வகையில் இந்த  பிரசாரம்  அறிமுகமாகியுள்ளது.   ஸ்டார்  இந்தியா  மேற்கொண்ட  ஆய்வு முடிவுகளின்படி.  எச்டி  டிவி,  எச்டி  செட் - டாப்  பாக்ஸ்  இரண்டையும்  வைத்திருந்தாலும்  கூட,   முழுமையான  எச்டி  பார்க்கும்  அனுபவத்தை    எச்டி  சேனல்களுக்கான    சந்தாவை   செலுத்தித்தான்  பெறமுடியும்  என்பதை    25  சதவீத  வாடிக்கையாளர்கள்  மட்டுமே  தெரிந்து  வைத்திருக்கிறார்கள்  என்பது  தெரியவந்திருக்கிறது.  

        ஸ்டார்  எச்டி  சேனல்களின் பிரத்யேக   அம்சங்களான  விசாலமான  படம்,   5   மடங்கு  துல்லியமான  திரைப்படம்,  5.1   டால்பி  சரவுண்ட்  சவுண்ட்  போன்றவற்றை  இந்த  பிரசாரம்  எடுத்துக்காட்டுகிறது.   இந்த  சிறப்பு  அம்சங்கள்,   எச்டி  டிவியில்    எச்டி  சேனல்களை பார்க்கும்  அனுபவத்தை மிக  சிறப்பாகவும்,  முழுமையாகவும்  உருவாக்க  உதவுகின்றன.கலைஞர்  தொலைக்காட்சியில்  “திருமதி   செல்வம்!”

 

 சில  ஆண்டுகளுக்கு  முன்  ஒளிபரப்பாகி   மாபெரும்  வெற்றி  பெற்ற    சீரியல்,  “திருமதி  செல்வம்.”   டைரக்‌ஷன்:   எஸ். குமரன்.

இது  இப்போது   கலைஞர்  தொலைக்காட்சியில்   திங்கள்  முதல்  வியாழன்  வரை  இரவு  9  மணிக்கு   ஒளிபரப்பாகி   வருகிறது.

 முன்னணி  கேரக்டர்  செல்வத்தை  மையப்படுத்தி  கதை  நகருகிறது.   அவனுடைய  நல்ல  பண்புகள்,  கடின  உழைப்பு,  மனைவி  அர்ச்சனா  மீதான  காதல்  ஆகியவை  அவரை  எவ்வாறு  புதிய  உயரத்துக்கு  அழைத்து  செல்கின்றன?  பின்னர்  பணமும்  புகழும்  அவரை  எவ்வாறு  மாற்றின?

சஞ்சீவ்,  அபிதா,  வடிவுக்கரசி,   தீபக்  தின்கர்,  ப்ரியா  மற்றும்  பலரும்  நடித்திருக்கின்றனர்.

சிறந்த  சீரியலுக்கான  தமிழக  அரசு  விருது  உட்பட  சிறந்த  டைரக்டர்,  சிறந்த  கேரக்டர்  போன்ற  பல  விருதுகளையும்   வென்ற  சீரியல்  ஆகும்.

                           


‘பா’வில்   இசை  வல்லுநர்கள்!

  ‘பா’  இசை  நிகழ்ச்சியை  பெப்பர்ஸ்  டிவியில்  ஞாயிறுதோறும்  காலை  11  மணிக்கு  ஒளிபரப்பி   வருகிறது.    ஸ்ரீதேவி  தொகுத்து  வழங்குகிறார்.

       வாரம்தோறும்   புகழ் பெற்ற  இசைக்கலைஞர்கள்,  கர்நாடக  இசைப்பாடகர்கள்  கலந்து  கொண்டு   தங்கள்   இசை  அனுபவங்கள்,  சாதனைகள்,  விருதுகள்  போன்றவற்றை  பற்றி  நேயர்களுடன்  பகிர்ந்து  கொள்கின்றனர்.

       இதுவரை  கத்ரி  கோபால்நாத், விக்கு  விநாயக்,  டிரம்ஸ்  சிவமணி,  டிஎம்டி.  பாலாம்பாள்,  மைசூர்  வாதிராஜ்,  கனகா  போன்றவர்கள்  கலந்து  கொண்டுள்ளனர்.தட்டுக்கடைகளின்  சிறப்பு!

 பெப்பர்ஸ்  டிவியில்  ‘தட்டுக்கடை’ புதன்கிழமைகளில்  மதியம்  12  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.   நிகழ்ச்சி  தொகுப்பு:   ஸ்ரீ.

            உணவு  தயாரிப்பதில் அதிக  நேரம்  எடுத்துக்கொள்வதை  யாரும்  விரும்புவதில்லை. அவ்வகையில்,  குறைந்த  நேரத்தில்  தரமான,  சுவையான,  ஆரோக்கியமான  பலகாரங்களை  உருவாக்குவதுதான்  இந்த  தட்டுக்கடைகளின்  அடிப்படை  நோக்கம்.  இதுவரை  மகாபலிபுரம்,  திருவள்ளூர்  உட்பட  பல  பகுதிகளை  சேர்ந்த  பிரபல  தட்டுக்கடைகளை  பற்றி  இதில்  இடம்பெற்றுள்ளன.  

    எந்த  தட்டுக்கடைகளில்  மக்கள்  கூட்டம்  அதிகமாக  இருக்கிறது,   அவ்வளவு  கூட்டம்  கூடுவதற்கான  முக்கிய    காரணம்  என்ன,  அங்குள்ள  ஸ்பெஷல்  அயிட்டங்கள்  என்னென்ன  என்பன  பற்றி   மக்களிடமே  கேட்டறிந்து  நேயர்களுக்கு  தெரிவிக்கப்படுகின்றன.Trending Now: