சேனல் நியூஸ் - 31. 03. 2021

01-04-2021 02:26 PM

 சாமான்ய   மக்கள்  பக்கம்  சார்பாக   கேள்வி!

 ‘காலத்தின்  குரல்’ நேரலை  விவாத  நிகழ்ச்சி  நியூஸ்  18  தமிழ்நாட்டில்  தினமும்  இரவு  7 மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  சேனலின்  அரசியல்  பிரிவு  ஆசிரியர்  தம்பி  தமிழரசன்  இதன்  நெறியாளர்.

 அன்றாட  நிகழ்வுகளின்  பின்னணியில்  பிணைந்திருக்கும் அரசியலை  விருப்பு,  வெறுப்பின்றி  வெளிக்கொணரும்  விவாத  நிகழ்ச்சி  இது.   ஜனநாயகத்தின்  எஜமானர்கள்  மக்களே  என்பதை  மனதில்  கொண்டு   ஆள்கிற,  ஆண்ட,  ஆள  நினைக்கிற  மாற்றத்தை  ஒரு  முழக்கமாக  முன்வைக்கக்கூடிய  கட்சிகளின்  பிரதிநிதிகளை  சமரசமில்லாமல்  அணுகி,  சாமான்ய  மக்களின்  பக்கம்  நின்று  கேள்வி  எழுப்புவதே  இந்த  நிகழ்ச்சியின்  முதன்மை  இலக்கு.

 கட்சி  அரசியலை  தாண்டி  மக்களை  நேரடியாகவும்,   மறைமுகமாகவும்  பாதிக்கிற  அத்தனை  துறைகளின்  முக்கிய  நிகழ்வுகளையும்  அனைத்து  கோணங்களிலும்  அலசுவது  இதன்  சிறப்பு  அம்சம்.வெளிச்சத்துக்கு   கொண்டு  வருகிற  முயற்சி!

 சத்தியம்  டிவியில்  ‘படைப்பாளி’ ஞாயிறுதோறும்  மதியம்  12.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  கேசவ்  பாண்டியன்  தயாரித்து  தொகுத்து   வழங்குகிறார்.

திரையில்  காட்டப்படும்  ஜாலங்களை   ரசிகர்கள்  பிரமிப்போடு  பார்த்துவிட்டு   அதை  சுலபமாக  கடந்து விடுகிறார்கள்.   அந்த  பிரமிப்பை  திரைக்கு  பின்னாலிருந்து  திரையில்  வெளிக்கொணரும்  சினிமாவின்  24  கலைகளின்  கலைஞர்களை  வெளிச்சத்துக்கு  கொண்டு  வருகிற  முயற்சிதான்  இது.மீண்டும்   “திருமதி   செல்வம்!”

 எஸ். குமரன்  டைரக்ட்   செய்து   கலைஞர்  தொலைக்காட்சியில்  சில  ஆண்டுகளுக்கு  முன்  ஒளிபரப்பான   வெற்றி  சீரியல்,  “திருமதி  செல்வம்.”  சிறந்த  சீரியலுக்கான  தமிழக  அரசு  விருது  உட்பட  சிறந்த  டைரக்டர்,  சிறந்த  கேரக்டர்  போன்ற  பல  விருதுகளையும்   வென்ற  சீரியல்  ஆகும்.

இந்த  சீரியலை  கலைஞர்  தொலைக்காட்சி  மீண்டும்    சென்ற  திங்கட்கிழமையிலிருந்து   திங்கள்  முதல்  வியாழன்  வரை  இரவு  9  மணிக்கு  ஒளிபரப்பி     வருகிறது.

முன்னணி  கேரக்டர்  செல்வத்தை  மையப்படுத்தி  கதை  நகருகிறது.   அவனுடைய  நல்ல  பண்புகள்,  கடின  உழைப்பு,  மனைவி  அர்ச்சனா  மீதான  காதல்  ஆகியவை  அவரை  எவ்வாறு  புதிய  உயரத்துக்கு  அழைத்து  செல்கின்றன?  பின்னர்  பணமும்  புகழும்  அவரை  எவ்வாறு  மாற்றின?

சஞ்சீவ்  ‘செல்வ’மாகவும்,  அபிதா  ‘திருமதி  செல்வ’மாகவும்  நடித்திருக்கின்றனர்.      வடிவுக்கரசி,   தீபக்  தின்கர்,  ப்ரியா  மற்றும்  ஏராளமானோருடன்   சூரியும்  நடித்திருக்கிறார்.கலர்ஸ்  தமிழில்    “வந்தது   நீயா?”  ஏப்ரல்  3   முதல்   ஆரம்பம்!

கலர்ஸ்  தமிழில்  வருகிற   ஏப்ரல்  3ம்  தேதியிலிருந்து   திங்கள்  முதல்  சனி  வரை  மாலை  6.30  மணிக்கு  “வந்தது  நீயா?”  ஒளிபரப்பாகவுள்ளது.    இது   பிரபல  “நாகினி” சீரியலின்  5வது  சீசன்  அகும்.

நாகினி   -   கழுகு  இருவருக்கும்  கசப்பான  திருமணம்  நடக்கிறது.   அதை  தொடர்ந்து  அளவற்ற  சக்தியை  கொண்ட   ரத்தக்காட்டேறி  குழந்தை  அவர்களுக்கு  பிறக்கும்  என்கிற  சாபத்துக்குள்ளாகின்றனர்.  தன்  சக்தியின்  மூல  ஆதாரத்தை  அடையாளம்  காண  முயற்சிக்கும்  அந்த  குழந்தை  ரேஹன்   சிங்காரம்,   ஒரு  பாதி  தேவதையாகவும்  மறுபாதி  மானிடப்பெண்ணாகவும்  விளங்கும்  பிரியாவை  சந்திக்க  நேரிடுகிறது.   என்றாலும்,   அவளது  ஆற்றலை  பற்றி  தெரியாதவனாக  இருக்கிறான்.  தங்கள்  சக்தியின்  பின்னால்  உள்ள  ரகசியத்தை  கண்டறியவும்,   தங்கள்  உறவின்  துரதிர்ஷ்டவசமான  அம்சத்தை  வெற்றிகரமாக  எதிர்கொள்ளவும்  ஒரு  போரில்  அவர்கள்  இருவரும்  ஈடுபடுகின்றனர்.   ஒருவர்  மற்றவரிடமிருந்து   பிரிந்து  செல்லும்படியான  வரலாறு  மறுபடியும்  நிகழுமா  அல்லது  ஒருவர்  மற்றவரோடு  இன்னும்  அதிகம்  நெருக்கம்  காட்டுவதற்கு  அது  உதவுமா?

இதற்குமுன்  பார்த்திராத  வகையில்  அதிக  மர்மம்,  திடுக்கிடும்  நிகழ்வுகள்,  ஆச்சரியமான  யதார்த்தங்கள்,   அற்புதமான  கதை  பின்னணி    ஆகியவற்றை  இந்த  சீசனில்    பார்க்க  முடியுமாம். உலக   தொலைக்காட்சியில்  முதல்  முறையாக  ................

  ‘யோகி’ பாபு   லீடிங்   கேரக்டரில்  நடித்த   “மண்டேலா” புதிய  படத்தை    உலக  தொலைக்காட்சியில்  முதல்  முறையாக  ஸ்டார்  விஜய்   நாளை  ( ஏப்ரல்  1 )  காலை  9.30  மணிக்கு  ஒளிபரப்பு   செய்கிறது.  இது  ஒரு  காமெடி  டிராமா,  பொலிட்டிக்கல்  சட்டையர்,   பேமிலி  எண்டர்டெய்னர்.

  இரு   அரசியல்  கட்சிகளுக்கு  இடையேயான  கிராம  பஞ்சாயத்து   தேர்தல்  சூழ்நிலையை  பின்னணியாக  கொண்ட  இந்த  படத்தை  புதியவர்  மடோன்  அஷ்வின்  டைரக்ட்  செய்திருக்கிறார். இடைவெளி   இல்லாமல் 100  செய்திகள்!

 நியூஸ்  7  தமிழில்    ‘நான்  ஸ்டாப்  100’  செய்தி  தொகுப்பு  தினமும்  காலை  7.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  டேப்னி,   தேவேந்திரன்  ஆகியோர்   தொகுத்து   வழங்குகின்றனர்.

வழக்கமான  செய்தி  வடிவங்களிலிருந்து  முற்றிலும்  மாறுபட்டு   சமூக  வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள  விவகாரங்கள்,  வைரல்  வீடியோக்கள்,  குற்ற   சம்பவங்கள்,  விளையாட்டு,  பொருளாதாரம்,  அறிவியல்,  பயனுள்ள  தகவல்கள்,  தமிழக  நிகழ்வுகள்,  தேசிய  மற்றும்  சர்வதேச  நிகழ்வுகள்  உட்பட  பல்வேறு  பிரிவுகளின்கீழ்   100  செய்திகள்  வரிசைப்படுத்தப்பட்டு   வழங்கப்படுகின்றன.

  இதை    www.ns7.tv நியூஸ்  7  தமிழ்  இணையதளத்திலும்,  யூ  டியூப்  பக்கத்திலும்  பார்க்கலாம்.
Trending Now: