டிவி நட்சத்திர பேட்டி - என் டார்கெட்! - ராகுல் ரவி

01-04-2021 02:19 PM

* “கண்ணான   கண்ணே”  சீரியலில்   ‘யுவா’  இந்த    ராகுல்  ரவி.

*  முழு  பெயர்,   ராகுல்  டி.  ரவீந்தரன்.

*  முன்னாள்  மாடல்.

*  டிசம்பர்  21,  1988ல்  கேரளாவிலுள்ள  திரிபிரயர்,     பூர்வீகம்.

*  ரவி  ராமி,    க்‌ஷேமா   அவருடைய  பெற்றோர்.

*   செயின்ட்   ஆன்டனீஸ்  ஹை  ஸ்கூலில்    பள்ளிப்படிப்பை  முடித்தார்.

*  பழுவில்  மாதா  காலேஜ்   ஆப்   டெக்னாலஜியில்   ஐசிஎப்ஏஐ   படித்தார்.  

*  மிகவும்  அமைதியான  கேரக்டர்.  

*  சோஷியல்  மீடியாவில்  ரொம்ப  ஆக்டிவாக  இருப்பவர்.  சுமார்  200  போஸ்டுகள்  போட்டிருப்பார்.

*  2011ல்   நடைபெற்ற   ஹேரோமேக்ஸ்   அழகான  தலைமுடி  போட்டியில்  பங்கேற்ற  அவர்,  அதில்  இரண்டாவது  ரன்னர் - அப்பாக   வந்தார்.

*  2013ல்   “டால்ஸ்”  மலையாள  படத்தின்  மூலம்   ஒரு  ஆன்ட்டி  -   ஹீரோவாக   சினிமாவில்  கால்  பதித்தார்.

*  அதன்பின்   “ஒரு  இந்தியன்  பிரணயக்கதா,”  “டயல்  1091,”  “கட்டுமக்கன்,”  “ஜொமான்டே    சுவிசேஷங்கள்”  ஆகிய  மலையாள  படங்களில்  நடித்தார்.

* “பொன்னம்பிலி” (2015 ) அவருடைய  முதல்  மலையாள  சீரியல்.  

*   தமிழில்,  குஷ்பு  தயாரித்து  ராஜ்கபூர்   டைரக்ட்  செய்த  “நந்தினி”  சீரியலில்  அறிமுகமானார்.   அதில்  ‘அருண்  ராஜசேகர்’ ஹீரோ  கேரக்டரில்  நடித்தார்.   அது  அவருக்கு  பெரிய  புகழை  தேடி  தந்தது.

*   அதையடுத்து,  “சாக்லேட்”  தமிழ்  மற்றும்   மலையாள  சீரியல்களில்   நடித்தார்.

*  “கண்ணான   கண்ணே”  அவருக்கு  மூன்றாவது  தமிழ்  சீரியல்.

*  2017ல்   ‘டி 4   ஜூனியர்  Vs சீனியர்’  மலையாள  ரியாலிட்டி  ஷோவையும்  தொகுத்து  வழங்கியிருக்கிறார்.

* வீண்  அரட்டை  அடிக்கவோ,  யாரையும்   கலாய்க்கவோ  சுத்தமாக  பிடிக்காது.  

*  மெலோடி  பாடல்களை  விரும்பி  கேட்பார்.    

*  எளிமைவிரும்பி.  

*  தமிழ்  சினிமாவில்  முன்னணியில்  வரவேண்டும்  என்பது  ராகுலின்  டார்கெட்.

*  தாய்மொழி  மலையாளம்  தவிர  தமிழ்,  ஆங்கிலம்,  கொஞ்சம்  இந்தி  தெரியும்.

*  சென்ற  டிசம்பர்  மாதம்   லட்சுமி  எஸ்.  நாயர்  என்பவரை   ராகுல்  கைப்பிடித்தார்.  அவர்களது  திருமணம்  இந்து  முறைப்படி  கேரளாவிலுள்ள  பெரும்பாவூரில்  நடந்தது.   அவர்கள்  இருவரும்  நீண்ட  காலமாக  பழகி  வந்தனர்.

* “அவளை  ( மனைவி )   நான்  முதன்முதலாக  பார்த்தபோது  அன்று   மற்றொரு  சாதாரண  நாளாகவே  இருந்தது.  ஆனால்,  போகப்போக,  அவளை  சந்தித்த  ஒவ்வொரு  நாளுமே  எனக்கு  நல்லதாகவும்,  சிறப்பாகவும்  இருந்தது.   அதிலிருந்து  அது  என்னுடைய  நாளாக  இல்லாமல் .......  அவளது  இனிமையான  சிரிப்பாலும்  பேச்சுகளாலும் ......  என்  வாழ்க்கையே  சிறப்படைய  ஆரம்பித்தது.   என்  வாழ்க்கையில்  உள்ள  அந்த  பெண்  வெறும்  பெண்  அல்ல,   அவள்  எனது  வாழ்க்கை  என்பதை  அன்று  முதல்  உணர  ஆரம்பித்தேன்.   என்  வாழ்க்கைக்கு  ஒளியேற்றியதற்கும்,  என்  வாழ்க்கையாக  இருப்பதற்கும்  மிகவும்  நன்றி  லட்சுமி!”  -  இப்படி  தன்  இன்ஸ்டாகிராமில்  லவ்  மூடில்  பதிவு  செய்துள்ளார்  ராகுல்.  
Trending Now: