19. 03. 2021( சேனல் நியூஸ்) சொல்லப்படாத காதல் கதை!

20-03-2021 04:34 PM

வெவ்வேறு  குடும்பங்களை  சேர்ந்த  இரண்டு  சகோதரர்கள்,    இரண்டு  சகோதரிகளை  பற்றிய கதையை  கொண்டது    “ராஜ  பார்வை.”  இது  ஸ்டார்   விஜய்  டிவியில்   வருகிற  22ம் தேதியிலிருந்து   திங்கள்  முதல்  சனி  வரை  மதியம்   1  மணி  ஸ்லாட்டில்  ஒளிபரப்பாகவுள்ளது.

கண்  பார்வையற்ற  ஆனந்த்,   அழகான,  அன்பான,  புத்திசாலிமிக்கவன்.   அவனது  தம்பி, அரவிந்த்.  பல  நல்ல  குணங்களுக்கும்,  அழகுக்கும்  சொந்தக்காரி,   சாரு.  அவளது  மாற்றுநிலை  சகோதரி,  பவித்ரா.   சாரு   ராசியில்லாதவள்   என  அவளது  மாற்றாந்தாயால்  வஞ்சிக்கப்படுபவள்.   ஆனந்தும்  சாருவும்  பல  முறை  சந்தித்துக்  கொள்ளும்  நிலை  ஏற்பட்டாலும்   ஆனந்த்    கண்  பார்வையற்றவன்  என்பது  சாருவுக்கு  தெரியவராது.  அவளுக்கு  உண்மை   தெரியும்  போது  என்ன  நடக்கிறது?   நாளடைவில்,  இருவரின்  குடும்பங்களுக்கிடையே  திருமண  ஒப்பந்தங்களும்  நடக்கின்றன.  யார்  யாரை  கல்யாணம் பண்ணிக்  கொள்கிறார்கள்?  ஆனந்த்,  சாரு,  அரவிந்த்,  பவித்ரா  ஆகியோரை  சுற்றி  சுழலும்  கதை.   இதில்  காதல்  மட்டுமல்ல,   பலவகையான  சச்சரவுகளும்   துரோகங்களும்  உண்டு. முன்னாப்   ஆனந்தாகவும்,   “நாம்  இருவர்  நமக்கு  இருவர்”  புகழ்  ராஷ்மி   சாருவாகவும்,  விகாஷ்  அரவிந்தாகவும்,  கீர்த்திகா  பவித்ராவாகவும்  நடிக்கின்றனர்.   இவர்களுடன்  சிவகவிதா, கிரிஷ், சீனிவாசன்  மற்றும்  பலரும்  நடிக்கின்றனர்.  

இதுவரை  சொல்லப்படாத  ஒரு  காதல்  காவியமாம்!  

அரசியல்  மேடை  பக்கம்!

  ‘போடுங்கம்மா   ஓட்டு’  நியூஸ்  18   தமிழில்  தினமும்  இரவு 10.30  மணிக்கும்,  அதன்  மறு ஒளிபரப்பு  அடுத்த  நாள்  காலை  9  மணிக்கும்  ஒளிபரப்பாகிறது.  முபாஷீர்  தொகுத்து  வழங்குகிறார்.

 இது  தேர்தல்  தொடர்பான  ஒரு  நிகழ்ச்சி  என்பதை  சுட்டிக்காட்ட  தேவையில்லை.   தேர்தல்  திருவிழாவில்  நடக்கும்  சுவாரஸ்யமான  சம்பவங்கள்,  மேடை மற்றும்   மேடையை  சுற்றி  நடக்கும்  வித்தியாசமான  சம்பவங்களின்  கலகலப்பான   தொகுப்பே   இது.

கலர்ஸ்   தமிழின் மகாசங்கம   எபிசோடுகள்!

  “மாங்கல்ய  தோஷம்,”  “அம்மன்”  ஆகிய  தனது  பிரபல  சீரியல்களை  ஒன்றாக  இணைத்து  ஒரு  மகாசங்கம  நிகழ்வாக  கலர்ஸ்  தமிழ்  சென்ற  திங்கட்கிழமையிலிருந்து  

( மார்ச்  15 )   தினமும்  இரவு  7  மணிக்கு  வழங்கி  வருகிறது.   இந்த  மகாசங்கம  எபிசோடுகள்  வருகிற  27ம் தேதி  வரை  ஒளிபரப்பாகும்.

இரு  மாறுபட்ட  கதைகளின்  ஒரு  கலவைதான்  இந்த  மகாசங்கம  எபிசோடுகள்.   30  வருடங்களுக்கு  பிறகு நடக்கும்  அக்னி  அம்மன்  திருவிழாவுக்காக  பரபரப்பாக  தயாராகி  கொண்டிருக்கும்  ஒரு  கோயிலில்,   நித்யாவும்   சக்தியும்  சந்திக்கும்படி  விதி  திட்டமிட்டிருக்கிறது.  அம்மன்  திருவுருவச்சிலையை   கோயில்  குளத்திலிருந்து  வெளியே  எடுப்பதற்காக  தேர்வு  செய்யப்பட்டிருக்கிற  பெண்கள்  குழுவுக்கு  எதிராக  இவர்கள்  இருவரும் கோயிலில்  போட்டியிடுவதை  காணலாம்.   இதற்கிடையே   ஈஸ்வர்,  சமரசம்,  தேவா, ரஞ்சித்  உட்பட  பலரும்  பல்வேறு  சூழ்நிலைகள்  காரணமாக  அதே  நேரத்தில்  அங்கே  இருக்க  நேரிடுகிறது.    நித்யா,  சக்தி  இருவருக்கும்  என்ன  நடக்க  போகிறது?   அவர்களின்  பயணத்தில்  இன்னும்  அதிக  அளவில்   தடைகள்,  பிரச்னைகள்  இருக்கப்போகின்றனவா?  

ஜனநாயக   திருவிழா!

 தேர்தலையொட்டி   நியூஸ்  18  தமிழ்  ‘ஜனநாயக  திருவிழா’வை  வருகிற  மே  மாதம்  வரை  ஒளிபரப்புகிறது.    இதில்   பல  சுவையான  பகுதிகள்  இடம்பெற்றுள்ளன.

 அறிந்ததும்   அறியாததும்:    

  நடைபெறவுள்ள   தமிழக  சட்டசபை  தேர்தலின்  234   தொகுதிகள் குறித்த  அறியப்படாத  செய்திகளை  வழங்குகிறது.  

திருப்புமுனை:

 தமிழ்நாட்டின்  ஒவ்வொரு  தேர்தலிலும்  திருப்புமுனையாக  அமைந்த  சுவையான  நிகழ்வுகளை  கொண்டது.

18  on  18:

தேர்தல்  முடிவுகளை  தீர்மானிக்கும்  முதல்  தலைமுறை வாக்காளர்களின்  எண்ணங்களை  பிரதிபலிக்கிறது.

ஒரு  நாள்  ஒரு  களம்  ஒரு  முகம்:

 பிரசார  களத்தில்  பரபரத்து  கொண்டிருக்கும் அரசியல்  ஆளுமைகளுடன் நாள்  முழுவதும் பயணித்து  அவர்களின்  அனுபவங்களை  பகிர்ந்து  கொள்கிறது.

நம்   வாக்கு  நம்  உரிமை:

தேர்தலில்  வாக்களிப்பது  முக்கியம்,   அந்த  வாக்குகளை  யாருக்காகவும்,  எதற்காகவும்  விலைபேசிவிடக்கூடாது என்பது  அதைவிட  முக்கியம்  என்பதை  வலியுறுத்துகிறது.

பேட்டி, பேச்சு,  அறிக்கை:

சுவாரஸ்யமான  தலைவர்களின்  பேட்டி,  பேச்சு,  அறிக்கை.

போடுங்கம்மா   ஓட்டு:

  தேர்தல்  மேடை  மற்றும்  மேடையை  சுற்றி  நடக்கும்  வித்தியாசமான  சம்பவங்களின்  தொகுப்பு.

பாரம்பரிய  சமையல்  அடிப்படையிலான பிரபல   உணவுகள்!

 பெப்பர்ஸ்  டிவியில்  ‘ஸ்டூடியோ  கிச்சன்’  சமையல்  நிகழ்ச்சி  சனிதோறும்  மதியம்  12  மணிக்கு  ஒளிபரப்பாகி   வருகிறது.    பாரம்பரிய  சமையல்  அடிப்படையிலான  மிகவும்  பிரபல  உணவுகள்  பற்றிய  நிகழ்ச்சி. அர்ச்சனா  தொகுத்து   வழங்குகிறார்.

இந்த  நிகழ்ச்சியில்   புதிய  பொருட்கள், எளிய  பொருட்களை கொண்டு   பல்வேறு  சமையல்  தயாரிப்பது  எப்படி  என்பது  காண்பிக்கப்படுகிறது.  மேலும்,  நிகழ்ச்சி  பார்வையாளர்களை  ஊக்குவிக்கும்  வகையில் ஒவ்வொரு  சமையல்  பகுதியிலும்  பிராந்திய  உணவுகள்,  மைக்ரோவேவ் சமையல்  &  கான்டினென்டல்  ரெசிபிகள்  போன்ற  நவீன  சமையல்களை எப்படி  தயாரிப்பது  என்பதையும்  அறிந்து  கொள்ளலாம்.

நையாண்டித்தனமாக  அரசியல்  சம்பவங்கள்!

  ‘அரசியல்ல   இதெல்லாம்  சாதாரணமப்பா’ சத்தியம்  டிவியில்  திங்கள்  முதல்  வெள்ளி  வரை  இரவு  9.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.

கேசவ்   பாண்டியன்,  கருப்பசாமி  இருவரும்  தயாரித்து தொகுத்து  வழங்குகின்றனர். சூடு  பிடிக்கும்  அரசியல்  களத்துக்குள்  நடக்கும்  சுவாரஸ்யமான  சம்பவங்களை  நேயர்களிடம்  நையாண்டித்தனமாக  கொண்டு  சேர்க்கிறது.

--Trending Now: