டிவி நட்சத்திர பேட்டி - என் மனதை புண்படுத்திய அட்வைஸ்! - கோமதிப்ரியா

17-03-2021 01:36 PM

*  “வேலைக்காரன்”  சீரியலில்  ( விஜய்  டிவி ),  ஜமீன்  குடும்பத்தில் வேலை  பார்க்கும்  வேலைக்காரி  ‘வள்ளி’யாக  நடித்து  வருபவர்,  இந்த  கோமதிப்ரியா.

*   ஏற்கனவே   அவர்    “ஓவியா ”  சீரியல்  புகழ்   ஆவார்.

*   மதுரையில்  பிறந்தவர்.

*   அப்பா,  அம்மா, ஒரு  தங்கை,  ஒரு  தம்பி  ஆகியோர்  உள்ளனர்.    கோமதிப்ரியாதான்  மூத்தவர்.

*  அவர்  ஒரு  இன்ஜினியரிங்    பட்டதாரி.

*   ஒரு  நல்ல  படிப்பாளியாகவும்,   புத்திசாலியாகவும்  இருந்ததால்,  கேம்பஸ்  இன்டர்வியூக்களில்  செலக்ட்  ஆகி,  சென்னை  மற்றும்  பெங்களூருவில்  பணியாற்றுவதற்கு  இரண்டு  வாய்ப்புகள்  வந்தன.   இவற்றில்  சென்னை  ஐடி  கம்பெனி  ஒன்றை  தேர்ந்தெடுத்து  அதில்   சுமார்  10  மாதகாலம்  வேலை  பார்த்தார்.

*   ஒரு நல்ல   வேலையில்  இருந்தாலும்,  ஏனோ  அதன்  மீது  அவருக்கு  பிடிப்பு  ஏற்படவில்லை.  நாம்   சினிமா,   டிவி  சீரியலில்     நடித்தாலென்ன   என்ற  எண்ணம்  தோன்றியது.  அதை  தொடர்ந்து  அதற்கான  முயற்சியில்  இறங்கினார்.

*  “என்  குடும்பத்தில்  யாருமே  மீடியா  சம்பந்தப்படாதவர்கள்  என்பதால்,  சின்னத்திரையில்    நுழைவதற்கு  என்ன  செய்ய  வேண்டும்,  எப்படி  நுழைய  வேண்டும்  ஆகியவற்றுக்கான  யோசனைகளோ,  அறிவுரைகளோ  எனக்கு  கிடைக்கவில்லை.      சில  குறும்படங்களுக்காக  ஆடிஷனில்  கலந்து  கொண்ட  போதுதான்  ‘ஆடிஷன்’  பற்றிய  விஷயமே  எனக்கு  தெரியவந்தது!”

*   அப்படி  ஆடிஷன்  சமயத்தில்,  கோமதிப்ரியாவின்  ( தோல் )  நிறத்தை  வைத்து  பலரும்  நெகட்டிவாக  கமெண்ட்  பண்ணியிருக்கிறார்கள்.     “ஒரு  நடிகைக்கு  தேவையான   நிறம்  உன்னிடம்  இல்லை.  அதனால்,    நீ   நடிக்க  முயற்சி  பண்ணாதே.   அது  வேஸ்ட்”  என  பலரும்  அவருக்கு  அட்வைஸ்  பண்ணியிருக்கிறார்கள்.    “இந்த  அட்வைஸ்  என்  மனதை  மிகவும்  புண்படுத்தியது.   என்  வாழ்க்கையில்  நடந்த  வேதனையான  விஷயம்  இது!”  என்கிறார்.

*  அதை  தொடர்ந்து  சின்ன  சின்ன  கேரக்டர்களில்  நடிக்க  ஆரம்பித்தார்.   அப்பொழுதுதான்  “ஓவியா”  சீரியலை  பற்றி  கேள்விப்பட்டு,   அதன்  ஆடிஷனில்  கலந்து  கொண்டார்.   அதில்  வெற்றியும்  பெற்றார்.   அவர்  ஒரு  நடிகையானது    அவருக்கு  நெருக்கமானவர்களாலேயே  நம்பமுடியவில்லையாம்.

*  “ஓவியா”வில்  டைட்டில்  கேரக்டரில்   நடிக்க  ஆரம்பித்ததுமே,   கோமதிப்ரியாவை   அவருடைய  அம்மா  உட்பட  யாரும்  அவருடைய  ஒரிஜினல்  பெயரில்  கூப்பிடவில்லை.   எல்லோரும்  அவரை  ‘ஓவியா’  என்றே  கூப்பிட   ஆரம்பித்தார்கள்.   குட்டீஸ்  அவரை  எங்கேயாவது  பார்த்துவிட்டால்,  அவருடன்  செல்பி   எடுக்காமல்  இருந்ததில்லை.  

*   பக்கா  டான்சர்  கிடையாது.   ஆனால்,  ஓரளவுக்கு  டான்ஸ்  தெரியும்.  இன்னும்   பலவகையான  டான்ஸ்  நுணுக்கங்களை  கற்றுக்கொள்ள  வேண்டுமாம்!    மேலும்,  மொழிகள்  பலவற்றை  கற்றுக்கொண்டு   அவற்றில்  பேசவும்  ரொம்ப  ஆசை.   அப்புறம்,  டிரைவிங்  கற்றுக்கொள்ளவும்  விருப்பம்.

* “என்  ஒட்டுமொத்த  வாழ்க்கையையே   மாற்றிவிட்டது  “ஓவியா.”  பள்ளி  மாணவியாக  இருந்தபோது  100  சதவீத  அட்டென்டன்சுக்காக   எனக்கு  பரிசு  கொடுத்தார்கள்.  அந்த  பரிசை  வாங்குவதற்காக  முதன்முதலாக  மேடையேறினேன்.  அதன்பின்,  நான்  மேடையேறியது,  ஒரு  நடிகையான  பிறகு   நான்  படித்த  காலேஜிலேயே  ஒரு  சிறப்பு  விருந்தினராக  கலந்து  கொள்வதற்காக.   இரண்டாம்  வருட  மாணவர்களுக்கு  ஒரு  தூண்டுதல்  பேச்சை  பேசுவதற்காக!   என்னால்  மறக்கவே  முடியாத  சம்பவம்  அது.”

*  பாலாவின்  டைரக்‌ஷனில்  ஒரு  படத்தில்  ஒரு  சின்ன  நர்ஸ்  கேரக்டரில்  நடித்திருக்கிறார்.  ஆனால்,  அந்த  படம்  வளராமல்  போய்விட்டாலும்,  பாலா படத்தில்  நடிப்பதற்கு  தனக்கு   வாய்ப்பு  கிடைத்ததை   எண்ணி  மிகவும்  பெருமைப்படுகிறார்.      சினிமா  கேமரா  முன்னால்  அவர்  நின்றது  அதுதான்  பர்ஸ்ட்.

*  பியூச்சர்  பிளான்ஸ்?    இப்போதைக்கு  அவரிடம்  கல்யாண  எண்ணம்  எதுவுமில்லை.   நல்ல  சப்ஜெக்டுகள்,  கேரக்டர்கள்  வந்தால்   சினிமாவில்  நடிப்பார்.   நல்ல  முறையில்  நடித்து   ஆடியன்ஸ்  மத்தியில்  பிரபலமடைய   வேண்டும்  என்பது  அவருடைய  விருப்பமாக  இருக்கிறது. தன்  பெற்றோருக்காகவும்,   சகோதர  சகோதரிக்காகவும்  சொந்த  வீடு  வாங்க  வேண்டும்  என்று  திட்டமிட்டிருக்கிறார்.

*  பயணம்    செய்வதற்கு  ரொம்ப  விரும்புபவர்.   நல்ல   சாப்பாட்டுப்பிரியர்.  


*  ஒரு  நல்ல  இசை   ரசிகை.   ரொம்ப  நேரம்  டிவி   பார்ப்பார்.Trending Now: