சேனல் நியூஸ் ( 11. 03. 2021 )

11-03-2021 06:27 PM

கலர்ஸ்  தமிழில்  ‘மகா சிவராத்திரி’  கொண்டாட்டம்: இன்று  இரவு  நேரடி  ஒளிபரப்பு!                                            

 இன்று  ‘மகா  சிவராத்திரி’யையொட்டி  ஈஷா  யோகா  மையம்  அமைப்புடன்  இணைந்து  கலர்ஸ்  தமிழ்  அந்த  கொண்டாட்டத்தை  இன்று  இரவு  11.30  மணியிலிருந்து  நாளை  காலை  5.30  மணி  வரை  நேரடியாக  ஒளிபரப்பு  செய்கிறது.  இதன்   மூலம்  நேயர்கள்  ஒரு  அற்புதமான  தெய்வீக  அனுபவத்தை  அனுபவிப்பார்கள்.


         பிரபல  இந்திய  கலைஞர்கள் இந்த  நிகழ்ச்சியில்  சிவபெருமானின்  புகழை  பாடுகின்றனர்.  கற்பனைக்கு  எட்டாத  அளவுக்கு  சக்தியையும்,  உற்சாகத்தையும்  சேர்த்து  வழங்கும்  வகையில் கபீர்  கபே, குட்லே  கான் புராஜக்ட், சந்தீப்  நாராயண்,  மாங்குலி, பார்திவ் கோஹில், அந்தோனி  தான்  மற்றும் சவுண்ட்ஸ்  ஆப்  ஈஷா  குழுக்கள்   பங்கேற்று  இசை  நிகழ்ச்சிகளை  தெய்வீக  மணத்துடன்  அளிக்கின்றனர்.  மேலும்,  ஈஷா  சம்ஸ்கிருதி  மாணவர்கள்  மெய்மறக்க  செய்யும்  வண்ணம் நடனமாடவும்  செய்கின்றனர்.  

இந்த  கொண்டாட்டத்திற்கு  ஒரு  மாயாஜால  அம்சமாக   யோகாவின்  தோற்றம்  பற்றிய  ஒரு  கண்ணோட்டம்  ஒளி - ஒலி  காட்சி  மூலமாக  சிறப்பு  ஒளிபரப்பாக  இடம்பெறுகிறது.  
சிறந்த  ஹீரோ,  ஹீரோயின், வில்லன், மாமியார், மருமகள்  யார்?  ஏப்ரல்   11ல்   6வது   ஸ்டார்  விஜய்  டிவி  அவார்ட்ஸ்!

ஸ்டார் விஜய் டிவி  சீரியல்கள் மற்றும்  நிகழ்ச்சிகளில் உள்ள   நேயர்களின்  அபிமான  நட்சத்திரங்கள்  ஒன்றிணைந்து ஒரே  பிரம்மாண்ட மேடையில் தோன்றும்  நிகழ்ச்சி,  விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்.  தமிழ்  சேனல்களில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ஸ்டார்   விஜய்  டிவி விருதுகள் ஆண்டுதோறும்  மிகவும்  கோலாகலமாக  நடப்பது  வழக்கம்.   அவ்வகையில்,   இந்த  ஆண்டும்  கோலாகலமாக   நடக்கிறது.  வரும் ஞாயிறு  ( மார்ச்  14 )  முதல் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்  நிகழ்ச்சியின் முன்னோட்டமாக பல நிகழ்ச்சிகளில்  விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு  ஜொலிக்கவிருக்கின்றனர்.

 முதல் நிகழ்வாக  மார்ச் 14  அன்று  ‘பரிவட்டம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.  மார்ச் 21 அன்று  ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி,’  மார்ச் 28  அன்று  ‘எங்க   ஏரியா  உள்ள வராதே,’  ஏப்ரல்  4 அன்று  ‘வருத்தப்படாத   வாலிபர் சங்கம்,’ இறுதியில்  ஏப்ரல் 11 அன்று  பிற்பகல்  6வது  விஜய்  டெலிவிஷன் அவார்ட்ஸ் ஒளிபரப்பாகும்.

 30 விருதுகள், வண்ணமயமான நடனங்கள், நகைச்சுவை,  பொழுதுபோக்கு மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் 6  மணி  நேரம் விருது வழங்கும் விழா நடைபெறும்.  

 சிறந்த கதாநாயகன்,  சிறந்த கதாநாயகி, சிறந்த தாய், சிறந்த தந்தை,  சிறந்த மாமியார், சிறந்த மருமகள் , சிறந்த மகன், சிறந்த மகள்,  சிறந்த சீரியல், பிடித்த குடும்பம், சிறந்த துணை நடிகர்  - ஆண், சிறந்த  துணை நடிகர் -  பெண், சிறந்த நகைச்சுவை மெகா தொடர், சிறந்த  வில்லன், திரையில் பிடித்த ஜோடி, வளரும் இளம் ஜோடி, சிறப்பு விருது  -  குழந்தை, ஆண்டின் கண்டுபிடிப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த  புகைப்பட இயக்குனர், சிறந்த எழுத்தாளர், சிறந்த இசையமைப்பாளர்,   சிறந்த தொகுப்பாளர் -   ஜோடி, சிறந்த தொகுப்பாளர் ஆண் / பெண்,

சிறந்த பாடகர், சிறந்த நகைச்சுவை நடிகர், பிடித்த விளையாட்டு  நிகழ்ச்சி , சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி, பிடித்த நிகழ்ச்சி   உட்பட  இன்னும்  பல  பிரிவுகளுக்கு  விருதுகள்  வழங்கப்படவுள்ளன.

திவ்யதர்ஷனியும்,  மா.  கா.  பா.  ஆனந்தும்   விழா  நிகழ்ச்சிகளை  தொகுத்து  வழங்கவுள்ளனர்.
மீண்டும்   “நாயகி!”

 

ஏற்கனவே   வேறொரு  முன்னணி  சேனலில்  சக்கை  போடு  போட்ட   “நாயகி,”

( 2018  -  2020 )  இப்போது  மீண்டும்  திங்கள்  முதல்  வியாழன்  வரை  இரவு  8  மணிக்கு  கலைஞர்  டிவியில்  ஒளிபரப்பாகி  வருகிறது.


       குடும்ப  பின்னணியை  மையப்படுத்தி  காதல்  காவியமாக  உருவாகியுள்ள  இதில்,  இளகிய  மனம்  படைத்த   ‘ஆனந்தி,’  துணிச்சல்மிக்க   ‘கண்மணி,’   மிரட்டலான   ‘சற்குணம்’  ஆகிய  மூன்று  கேரக்டர்கள்  முக்கிய  பங்கு  வகிக்கின்றன.   ‘ஆனந்தி’யாக  146  எபிசோடுகள்  வரை  விஜயலட்சுமியும்  அதன்பின்  வித்யா  பிரதீப்பும்,    ‘கண்மணி’யாக  பாப்ரி  கோஷும்,  ‘சற்குண’மாக  அம்பிகாவும்  நடித்திருக்கின்றனர்.  இவர்களுடன்  திலீப் ராயன், மீரா  கிருஷ்ணன்,  சுரேஷ்  கிருஷ்ணமூர்த்தி  மற்றும்  பலரும்  நடித்திருக்கின்றனர்.    


எஸ். குமரன்  டைரக்ட்  செய்திருந்தார்.
 ஜாலியாக   நையாண்டி!

 

 ‘நியூஸ்  ஆக்‌ஷன்  700’  நியூஸ்  7  தமிழில்  திங்கள்  முதல்  வெள்ளி  வரை  இரவு  9.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  வேல்  பிரசாந்த்  தொகுத்து   வழங்குகிறார்.  அன்றாட   செய்திகளை ஜாலியாக  நையாண்டி  செய்யும்  நிகழ்ச்சி  இது.


     ‘நியூஸ்  மசாலா’ பகுதியில் -  அன்றைய  சில  முக்கிய  செய்திகள்  தேர்ந்தெடுக்கப்பட்டு  கலோக்கிய  மொழியில்  காமெடியாக  தொகுக்கப்படுகின்றன.  ‘நோ  கமெண்ட்ஸ்’  பகுதியில்  -  சமூக  வலைதளங்களில்  வைரலாகும்  செய்திகள்,   அவை  தொடர்பான  நெட்டிசன்களின்  கமெண்ட்டுகள்  ஜாலியாக  அலசப்படுகின்றன.  ‘மெயின்  பிக்சர்’ பகுதியில் -  அன்றைய  செய்திகளிலிருந்து  முக்கிய  செய்தி  தேர்வு  செய்யப்பட்டு கருத்தாழமாக  அலசப்படும்.

முழு  தேர்தல்  பிரசாரம்! சத்தியம்  டிவியில்  ‘மகா  ஜனங்களே’ திங்கள்  முதல்  வெள்ளி  வரை  காலை  8.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.   அனல்  பறக்கும்  அரசியல்  கட்சியினரின் முழு  தேர்தல்  பிரசாரங்களை  காண்பிக்கிறது.

தமிழகத்தின்  பட்டி தொட்டியெங்கும்  ஒவ்வொரு  கட்சி  தலைவர்களும்,  வேட்பாளர்களும்  என்ன  பேசுகிறார்கள் என்பதை  தெள்ளத்தெளிவாக  நேயர்களின்  வீட்டு  வரவேற்பறைக்கே  கொண்டு  வரும்  நிகழ்ச்சி  இது.
Trending Now: