டிவி நட்சத்திர பேட்டி - மறுப்பே சொல்லமாட்டேன்! - ப்ரியா பிரின்ஸ்

11-03-2021 06:14 PM

*  “கண்ணான  கண்ணே”  சீரியலில்   ‘மேனகா’வாக  நடிப்பவர்,  இந்த  ப்ரியா  பிரின்ஸ்.                  கதைப்படி,  அவர்  பிருத்விராஜின்  முன்னாள்   பிஏ,   பவுசில்  ஹிடயாவின்  அம்மா.    


*      பத்திரிகை  இயலில்   பட்டப்படிப்பை   முடித்ததும்,  ஒரு  ரேடியோ  ஜாக்கியாக  தன்  மீடியா            வாழ்க்கையை  தொடங்கினார்.


*  ‘புதிய  தலைமுறை’ டிவியில்  செய்தி  வாசிப்பாளரானார்.


*  “என் பெயர்  மீனாட்சி”  சீரியலில்  ( 2010 )  ஒரு  நடிகையாக  அறிமுகமானார்.   சி. ஜெரால்ட்            டைரக்ட்  செய்திருந்தார்.


*   “இஎம்ஐ  -  தவணைமுறை  வாழ்க்கை,”  “தமிழ்  கடவுள்  முருகன்,”  “மாப்பிள்ளை,”        “பொன்மகள்  வந்தாள்,” “கண்மணி”  ஆகியவை  அவர்  இதுவரை  நடித்திருக்கும்  மற்ற            சீரியல்கள்.   “தமிழ்  கடவுள்  முருக”னில்  பார்வதிதேவியாகவும்,   “பொன்மகள்                                  வந்தா”ளில்  ‘மாயா’ நெகட்டிவ்  கேரக்டரிலும்,  “கண்மணி”யில்  ஒரு  சப்போர்ட்டிங்                     கேரக்டரிலும்  நடித்திருந்தார்.

*     அக்டோபர்  27,  1988ல்    சென்னையில்  பிறந்தார்.


*      5  அடி  1  அங்குல  உயரமும்,  57  கிலோ  எடையும்  கொண்டவர்.


*     திருமணமானவர்.     கணவர்  பெயர்,  பிரின்ஸ்.


*  ‘மிஸ்டர்  &  மிசஸ்  சின்னத்திரை’யில்   போட்டியாளராக  பங்கேற்றார்.

*    பாண்டிராஜ்  டைரக்ட்  செய்த   “பசங்க  2”  மூலம்  சினிமாவில்  நுழைந்தார்.  அந்த              படத்தில்  ஒரு  டீச்சராக  நடித்திருந்தார்.  


*  “2.0,”  “நடுவன்”  ஆகிய  படங்களிலும்  நடித்திருக்கிறார்.


*     மறுப்பு  தெரிவிக்காமல்  ஒப்புக்கொள்வது   அவருடைய   சுபாவம்.


*    தமிழ்,   தாய்மொழி.    ஆங்கிலமும்   தெரியும்.


*    அனைவருக்கும்   பிடித்தவளாக  இருக்க  வேண்டும்  என்று  நினைப்பவர்.


*  அன்பாக  இருப்பது,  விதிமுறைகளுக்கு  கட்டுப்படுவது   அவரிடமுள்ள  பாசிட்டிவ்               சமாச்சாரங்கள்.


*  ஸ்போர்ட்சில்   பேஸ்பால்  பிடிக்கும்.


*  அசைவ  உணவுப்பிரியர்.


*  லண்டன், கிராண்ட்  கேன்யன்  ஆகிய  நாடுகளுக்கு  விசிட்  அடிக்க  திட்டம்  போட்டிருக்கிறார்.


*  திராட்சைப்பழம்  அவருடைய  பேவரிட்  புரூட்.


*  தோட்டம்  பராமரிப்பது,  நிலப்பரப்பு  தோற்றத்தை  மேம்படுத்துவது,  மியூசிக்  ( சினிமா          பாடல்கள் )   கேட்பது   ஆகியவற்றை    ஹாபீசாக   வைத்திருக்கிறார்.

Trending Now: