இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி

06-03-2021 03:55 PM

அகமதாபாத்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரி 3-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய அணியுடனான 4வது டெஸ்டில் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் விளையாடிய  இங்கிலாந்து அணி  முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்திருந்தது.

ரோகித் 8 ரன், புஜாரா 15 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

இந்திய அணி 26.4 ஓவரில் 41 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

58.1 ஓவரில் 146 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.

ரிஷப் பன்ட் - வாஷிங்டன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு மிக உறுதியுடன் விளையாடி 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்தது.

இந்தியா 89 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆட்டமிழந்தது.

2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சை தாக்க பிடிக்க முடியாமல் 5 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால், இங்கிலாந்து அணி 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  1 இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.Trending Now: