இந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரிஷப் பண்ட் 100 அடித்தார்

05-03-2021 05:14 PM

அகமதாபாத்:

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது

 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய  இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு  24 ரன்கள் எடுத்து இருந்தது.

2- ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.

2ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புஜாரா ஆட்டமிழந்தார்.

பின்னர், களம் இறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆனார்.

ரகானேவும் 27 ரன்களில் அவுட் ஆனார்.

இந்திய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி,  294 ரன்கள் எடுத்துள்ளது

அஸ்வின் 13 ரன்களில்  விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.  (இன்றைய போட்டியில் சிக்சர் அடித்து தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார் பண்ட்). 101 ரன்களில் அவுட் ஆனார் பண்ட்.

தற்போது களத்தில் வாஷிங்டன் சுந்தர் (60*), அக்சர் படேல் (11*) ஆகியோர் உள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்து 89 ரன்கள் முன்னிலை பெற்றது

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.Trending Now: