இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டி: முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள்

04-03-2021 06:17 PM

அகமதாபாத்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் ஆட்டநேர இறுதியில்1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்துள்ளது.

இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று காலை தொடங்கியது.

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணி பந்து வீச தொடங்கியது.

இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றிருந்தனர்.

ஆட்டத்தின் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் 28 ரன்களும், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், போப் 29 ரன்களும், பென் போக்ஸ் 1 ரன்னும், லாரன்ஸ் 46 ரன்களும், டோம்னிக் பெஸ் 3 ரன்னும், லீச் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் இங்கிலாந்து அணி 75.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் 4 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணியில் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

 சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

  முதல்நாள் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 12 ஒவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

  புஜாரா 15 ரன்களுடனும், ரோகித் சர்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

  தற்போது இந்திய அணி, இங்கிலாந்து அணியை விட 181 ரன்கள் பின்தங்கி உள்ளது.Trending Now: