வெங்கையா நாயுடு, மோடி, அமித் ஷா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது

01-03-2021 02:51 PM

சென்னை

இரண்டாம் கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி இன்று இந்தியா முழுவதும் தொடங்கியது.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இன்று புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

உள்துறை அமைச்சர், அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழ்நாடு ஆளுநர், பீகார் மாநில முதலமைச்சர், ஒடிஸா மாநில முதலமைச்சர் ஆகியோரும் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார். 

முதற்கட்டமாக முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1 கோடியே 37 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவிட்-19க்கான தடுப்பு மருந்து இரண்டாவது கட்டமாக மூத்த குடிமக்கள்  60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக 250 ரூபாய் கட்டணத்துடன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து செலுத்தப்படும்  எனவும்  மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு தடுப்பூசி

பிரதமர் மோடி  இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.. 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

60 வயதுக்கு மேற்பட்ட தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசு துணை தலைவர் வெங்கையாவுக்கு தடுப்பூசி

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ்  இன்று போட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு ஆளுநருக்கு தடுப்பூசி

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தடுப்பூசி

உள்துறை அமைச்சர், அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரும் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மாநில முதலமைச்சர்களுக்கு தடுப்பூசி

பீகார் மாநில முதலமைச்சர்  நிதிஷ் குமார்

ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ்  இன்று போட்டுக் கொண்டனர்


Trending Now: