ரஜினி அரசியலில் வேண்டாம் என்று விலகியதற்கு இந்த இரண்டு முக்கிய நடிகர்கள்தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்..

01-03-2021 12:00 PM

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பினார், இப்படிப்பட்ட குழப்பமான சூழலில் தான் ரஜினி திடீரென்று அரசியலில் இருந்து விலகிக்கொளவதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினி அரசியலில் இருந்து விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஆம், தெலுங்கில் பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, மோகன் பாபு இருவரும் ரஜினியை சந்தித்த போது அவர்கள் அரசியலில் பட்ட கஷ்டங்களை அவரிடம் கூறியுள்ளனர். இதனால் தான் ரஜினி தனது முடிவை மாத்திக்கொண்டு அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவதாக அறிவித்து இருந்தார் என ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.Trending Now: