நகைக்காக தாயாரை குறிவைத்து மகளை கொன்ற கொள்ளை கும்பல்: போலீஸார் தேடுதல் வேட்டையில் சிக்கினர்

28-02-2021 06:21 PM

சென்னை,

நகைகளை கொள்ளையடிக்க தாயாரை குறி வைத்து, மகளை கொலை செய்த கும்பலை சென்னை தனிப்படை போலீசார் வேறொரு கொள்ளை வழக்கில் விசாரணை நடத்திய போது சிசிடிவி கேமரா மூலம் கைது செய்தனர்.

ஜெயந்தி
மோனிகா

  சென்னை அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் கமலக்கண்ணன் (வயது 48). இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களது மகள் மோனிகா (23). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

   கடந்த வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் கமலக்கண்ணன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ஜெயந்தி, மோனிகா  மட்டும் தனியாக இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் வீட்டின் மாடியில் உள்ள வீட்டின் அறைக்குள் புகுந்து தாய், மகள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த ஜெயந்தி சமையல் அறையில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மகள் மோனிகா காயங்களுடன் அலறினார்.

  அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது இருவரும் அரிவாளோடு கீழே இறங்கி தப்பி ஓடினர். அவர்களைக் கண்டதும் பொதுமக்கள் வெகுதுாரம் விரட்டிச் சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.

   பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக இறந்து போனார். மோனிகா சிகிச்சை பெற்று வருகிறார்.

   இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் துணைக்கமிஷனர் ஜவகர் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி மாதம் தாம்பரத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ரவி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் கொள்ளை போனது. அந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அங்கிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் தொடர்புடைய நபர்களின் விவரங்களை அமைந்தகரை போலீசுக்கு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த காட்சியில் இருந்த நபர்கள்தான் ஜெயந்தியை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த கொள்ளையில் ஈடுபட்டது புளியந்தோப்பு, ராஜா தோட்டத்தைச் சேர்ந்த அந்தோணி குமார், நம்மாழ்வார்பேட்டை பாலாஜி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அந்தோணி குமார்
பாலாஜி

  அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாம்பரம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், அமைந்தகரையில் ஜெயந்தியை கொலை செய்ததும் நாங்கள்தான் என பரபரப்பு தகவல்களை வெளியிட்டனர்.

   ஜெயந்தியின் தாயார் ருக்மணி கழுத்தில் நிறைய நகைகள் அணிந்திருப்பதை நோட்டமிட்டோம். அவரிடம் கொள்ளையடிப்பதற்காக சென்ற போது மோனிகா அங்கு படுத்திருந்தார். அவரிடம் கொள்ளையடிக்க முயன்ற போது, அவரது தாய் ஜெயந்தி தடுக்க வந்தார். இதனால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தோம் என இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

  அதனையடுத்து அந்தோணிகுமார், பாலாஜி இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளை முயற்சிக்காக நடந்த கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்ட சொரி அந்தோணி என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.Trending Now: