சேனல் நியூஸ் ( 26. 02. 2021 )

26-02-2021 12:48 PM

முதல்  முறையாக   ஸ்டார்  விஜய்  டிவியில்   “ஏலே”  ஒளிபரப்பு!

முதன்முறையாக   தியேட்டர்  ரிலீசை  தவிர்த்து   டைரக்டாக  உலகளவில்    ஸ்டார்  விஜய்  டிவியில்   “ஏலே”  புதிய  திரைப்படம்  வருகிற  ஞாயிறன்று   ( பிப்.  28 )  மாலை  3  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.

அப்பா  -  மகன்  உறவை  அடிப்படையாக  கொண்ட படம்  இது.  ஒரு  புதிய,  யதார்த்தமான  குடும்ப   காமெடி  படமாக  எடுக்கப்பட்டுள்ளது.   சமுத்திரகனி,  மணிகண்டன்  இருவரும்  அப்பா -  மகனாக  நடித்திருக்கின்றனர்.  

 “சில்லு  கருப்பட்டி”  பட  டைரக்டர்  ஹலிதா  ஷமீம்  டைரக்ட்   செய்திருக்கிறார்.  கலைஞர்   டிவியில்  “தெய்வ  மகள்,” “நாயகி!”

 ஏற்கனவே  ஒரு  முன்னணி  சேனலில்  ஒளிபரப்பாகி  நேயர்களின்  மனதை  கொள்ளை  கொண்ட   மெகா  சீரியல்கள்   “தெய்வ  மகள்,”  “நாயகி”  ஆகியவை.    இந்த  இரண்டு  சீரியல்களையும்  கலைஞர்  டிவியில்  மீண்டும்  கண்டுகளிக்கலாம்.

கிருஷ்ணா,  வாணி  போஜன்,  ரேகா  கிருஷ்ணப்பா  மற்றும்  பலரும்  நடித்துள்ள  “தெய்வ  மகள்”  வருகிற  மார்ச்  1ம்  தேதியிலிருந்து  திங்கள்  முதல்  வியாழன்  வரை  இரவு  7  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.    

 திலீப் ராயன்,  விஜயலட்சுமி, வித்யா பிரதீப், அம்பிகா,  பாப்ரி  கோஷ்  மற்றும்  பலரும்  நடித்துள்ள  “நாயகி”  மார்ச்  1ம்  தேதியிலிருந்து  திங்கள்  முதல்  வியாழன்  வரை  இரவு  8  மணிக்கு  ஒளிபரப்பாகவுள்ளது.  தேர்தலில்  கண்மணி  வெற்றியடைவாள்?


 ராஜ்  டிவியில்  “பூவிழி  வாசலிலே” திங்கள்  முதல்  வெள்ளி  வரை  இரவு  7.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  

 பாக்யா,  கவுரி  ஆகியோரை  கண்மணி  கடத்தி வைத்துக்கொண்டு  சிறை பிடிக்கிறாள்.  ஆனால்,  தேன்மொழி இதை  மிகவும்  வன்மையாக  கண்டிக்கிறாள்.  இது  குறித்து  கண்மணியிடம்  வாதிடுகிறாள்.  யாரும்  எதிர்பார்க்காத  நிலையில், தேன்மொழியின்   தலையில்  ரன்வீர்  விஜய்  பலமாக  தாக்குகிறான்.  அதில்,  தேன்மொழி  சுயநினைவை  இழந்துவிடுகிறாள்.   அப்போது  பாக்யாவும்   அங்கிருந்து  தப்பி காட்டுக்கு  ஓடுகிறாள்.  அதே  சமயம்,  கண்மணியின்  அடியாட்கள் பின்தொடர்ந்து  பாக்யாவை  சிறையில்  அடைக்கிறார்கள்.

 கண்மணியின்  அச்சுறுத்தலை  தொடர்ந்து  தேன்மொழி  தேர்தலிலிருந்து  விலக முடிவு  செய்கிறாள்.  கண்மணி  தேர்தலில்  வெற்றி  பெற்றால், தன் கிராம  மக்களை  பழிவாங்க  வேண்டும்  என  சபதமெடுக்கிறாள்.  அதே  சமயம்,  ரன்வீர்  விஜய் ஆசாத்கஞ்சை  சேர்ந்த  20  சிறுமிகளை  வலுக்கட்டாயமாக  திருமணம்  செய்து  வைக்க  முயற்சிக்கிறான்.

இந்நிலையில்,  சூரஜ்  தனது  மனைவி தேன்மொழியையும்,  பாக்யாவையும்,  கவுரியையும்   கண்மணியிடமிருந்து  மீட்பாரா?   கண்மணி  தேர்தலில்  வெற்றி  பெறுவாளா?  தவறுகளை    திருத்திக்கொள்ள ஒரு   வாய்ப்பு!

‘ராஜ்   தர்பார்’  ராஜ்  டிவியில்    சனியன்றும்,  ஞாயிறன்றும்  இரவு  10  மணிக்கு  ஒளிபரப்பாகி   வருகிறது.

 நேயர்களை  மகிழ்விப்பதற்காகவும்,  நாட்டு  நடப்புகளை அவர்கள்  காமெடியாக  அறிந்து கொள்ள  செய்யவும்,  அரசியல்வாதிகள்  மற்றும்  சினிமா  நட்சத்திரங்கள்  தங்கள்  தவறுகளை  திருத்திக்கொள்வதற்கு  ஒரு  வாய்ப்பு  ஏற்படுத்தி  தரவுமே  இது  தயாரிக்கப்படுகிறது.  

அரசியல்  கட்சி  தலைவர்கள்,   சினிமா  நட்சத்திரங்கள்  ஆகியோரின்   பேச்சுகள்,  தங்கள்  பேட்டிகளில்  தெரிவிக்கும்  கருத்துக்கள்  நையாண்டியாகவும்,  காமெடியாகவும் தொகுத்து  வழங்கப்படுகின்றன.   பேச்சின்போது  தவறுதலாக வெளிப்படும்  பேச்சுக்களை  சினிமாவில் வரும்  காமெடி  வசனம் கலந்து சுவையாக   தொகுத்து  வழங்குகிறார்  நிகழ்ச்சி  தொகுப்பாளர்.  சுவையான  அரசியல்  நிகழ்வுகள்!

  நியூஸ்  7  தமிழில்  திங்கள்  முதல்  சனி  வரை  மாலை  5  மணிக்கு  ‘மைக்  டெஸ்டிங்  123’ ஒளிபரப்பாகி   வருகிறது.

ஜெயகல்யாணி   தயாரிக்க,  உதயகுமார்  தொகுத்து  வழங்குகிறார்.

அனல்  பறக்கும்  தேர்தல்  பிரசாரங்களில்  நிகழும்  சுவாரஸ்ய  அரசியல்  நிகழ்வுகளின்  தொகுப்பு  இது.   அரசியல்  மேடை  மட்டுமல்ல,  மேடையை  சுற்றி  நடக்கும்  அத்தனை  நிகழ்வுகளும்  நகைச்சுவை  ததும்ப  வழங்கப்படுகின்றன. டேஸ்ட்டில்   ‘பீட்’ அடிக்கமுடியாத  தட்டுக்கடைகள்!

   ‘தட்டுக்கடை’  புதன்தோறும்  மதியம்  12  மணிக்கு  பெப்பர்ஸ்  டிவியில்  ஒளிபரப்பாகி வருகிறது.   ஸ்ரீ  தொகுத்து  வழங்குகிறார்.

குறைந்த  நேரத்தில்  -   தரமான,  சுவையான,  ஆரோக்கியமான  பலகாரங்களை உருவாக்குவதுதான் தட்டுக்கடைகளின்  அடிப்படை  நோக்கம்.  இதுவரை  மகாபலிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட  பல  பகுதிகளை  சேர்ந்த  பிரபல  தட்டுக்கடைகளை  பற்றி  இதில்  சொல்லப்பட்டுள்ளன.

சாலையோரங்களில்  இருக்கக்கூடிய  அனைத்து  தட்டுக்கடைகளும் இந்த  நிகழ்ச்சிக்காக  தேர்வு  செய்யப்படுவதில்லை.    எந்தெந்த  தட்டுக்கடைகளில்  மக்கள்  கூட்டம்  அதிகமாக  இருக்கிறது,  எதற்காக  அங்கே மக்கள்  தேடி  வந்து  பலகாரம்   வாங்குகிறார்கள்,  அங்குள்ள  ஸ்பெஷல்  பலகாரங்கள்  ஆகியவை  பற்றி  நேரடியாகவே  கேட்டு  விவரிக்கப்படுகின்றன.  வெளிநாடுகளில்  இருப்பவர்கள்  கூட  இந்த  நிகழ்ச்சியை  மிகவும்  விரும்பி  பார்க்கிறார்களாம்!Trending Now: