இங்கிலாந்து - இந்திய அணி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்கள் விளாசினார் அஷ்வின்

15-02-2021 03:36 PM

சென்னை

 சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட இறுதியில் 481 ரன்கள் முன்னிலையுடன் 286 ரன்கள் எடுத்தது.

சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இப்போட்டியில் 106 ரன்கள் அடித்து விளாசினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இரு அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்த டெஸ்டு போட்டியைக் காண 50 சதவீத ரசிகர்கள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது.

2-ம் நாள் முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மா 25, புஜாரா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3ம் நாள் ஆட்டம்

இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் விக்கெட்டைகள் வரிசையாக விழுந்தன.

முதல் ஓவரிலேயே புஜாரா 7 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ரோஹித் சர்மாவை 26 ரன்களில் ஃபோக்ஸின் அபாரமான ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தினார் லீச்.

5-ம் நிலை வீரராக ரிஷப் பந்த் களமிறங்கினார். ஆனால் அவரால் இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 8 ரன்களில் லீச் பந்துவீச்சில் ஸ்டம்ப் அவுட் ஆனார்.

2 பவுண்டரிகளில் அடித்து 10 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரஹானே.

 18 பந்துகளுக்குத் தாக்குப்பிடித்த அக்‌ஷர் படேல், 7 ரன்களில் மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய அஷ்வின், விரைவாக ரன்கள் எடுத்தார்.

உணவு இடைவேளையில் இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது.

ரவிச்சந்திரன் அஷ்வின், இந்த இன்னிங்ஸில் பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி வீசிய 64 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

149 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்த கோலி, மொயீன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி, தேநீர் இடைவேளையின்போது 416 ரன்கள் முன்னிலையுடன் 73 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் விளையாடிய இஷாந்த் சர்மா 24 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அஷ்வின் 148 பந்துகளில் 106 ரன்கள் (14 பவுண்டரிகள், 1 சிக்ஸ்) எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் அடித்த 5வது சதம் இதுவாகும்.

முகம்மது சிராஜ் 21 பந்துகளில் 16 ரன்கள் (2 சிக்ஸ்) எடுத்தார்.

85.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  286 ரன்கள் எடுத்து இந்திய அணி (329 & 286)Trending Now: