சேனல் நியூஸ் (12. 02. 2021)

13-02-2021 12:20 PM

ஸ்டார்   விஜய்   டிவியின்   ‘காதலே  காதலே’ காதலர்   தின  சிறப்பு  நிகழ்ச்சி!


  வருகிற  ஞாயிறன்று  (  பிப்.  14  )   ‘காதலர்  தினம்.’  அதையொட்டி,   சிறப்பு  நிகழ்ச்சியாக   ஸ்டார்  விஜய்  அன்று   மாலை  3  மணிக்கு   ‘காதலே  காதலே’ ஒளிபரப்புகிறது.  

  டான்ஸ்,   மியூசிக்,  லவ்  ஆகியவற்றுடன் ரியல்  மற்றும்  ரீல்   நட்சத்திரங்கள்  தங்கள்  வாழ்க்கைத்துணைகளுடன் வழங்கும் பிரம்மாண்டமான  பொழுதுபோக்கு  நிகழ்ச்சி  இது.

    

 இந்த  மூன்றரை  மணி  நேர  நிகழ்ச்சியை   ‘பிக்  பாஸ்’ புகழ்  அர்ச்சனா  தொகுத்து  வழங்குகிறார்.

அவ்வகையில்  -    ரியல்  ஜோடிகள்   சித்து - ஸ்ரேயா,  சஞ்சீவ் -  மானசா,  வினோத் - சிந்து,  உசேன் -  மணிமேகலை,  ரியாஸ் -  நிஷா,  தங்கதுரை - அருணா,  மதன் -  ரேஷ்மா  ஆகியோரும்,

ரீல்  ஜோடிகள்  பிரஜின் -  ரேஷ்மா,  திரவியம் - பவித்ரா,  நவீன் -  நேஹா,  புகழ்  -  தர்ஷா  அசார், அருணா -  பரினா,  பாலா -  ரித்விகா  ஆகியோரும்  பங்கேற்கின்றனர்.  

  எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா,  ஏ. ஆர்.  ரஹ்மான்,  யுவன்  சங்கர்  ராஜா  ஆகியோரின்  பாடல்களுடன்  பல்வேறு  காலகட்டங்களை  காதல்  ததும்ப  இந்நிகழ்ச்சி  பார்வையாளர்களை  அழைத்து  செல்லுமாம்.   ‘செம  ருசி  ......   சமையல்  ஈசி!’

  ‘செம  ருசி  .....  சமையல்  ஈசி’  புதிய  சமையல்  நிகழ்ச்சி  பெப்பர்ஸ்  டிவியில்  செவ்வாய்தோறும்   மதியம்  12  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  

          பிரபல  ஸ்டார்  ஓட்டல்  செப்  கலைச்செல்வன்  நடத்துகிறார்.   சமையல்  துறையில்  சுமார்  19  ஆண்டுகளாக  பிரபலமாக  விளங்கும்  அவர்,  பல  ஸ்டார்  ஓட்டல்களில்  பணியாற்றிய  அனுபவம்  வாய்ந்தவர்.  மேலும், ‘சிறந்த  சமையல்  கலைஞ’ருக்கான  எண்ணற்ற  அவார்டுகளையும்  பெற்றவர்.   இந்நிகழ்ச்சி  வாயிலாக,  அவர்  தான்  கற்றுக்கொண்ட  சமையல் கலை  நுணுக்கங்களையும்,  அன்றாட  சமையலில்  நாம்  உண்ணும்   உணவுகளையே  எப்படி  விதவிதமாக  சமைப்பது  என்கிற  கலையையும்  சொல்லி  தருகிறார்.  சுருக்கமாக  சொல்லப்போனால்,  உள்ளூர்  வற்றல் குழம்பு  முதல்  அயல்நாட்டு  உணவு  வகை  வரை  சமைத்து  காட்டுகிறார்.


வாரம்  ஒரு  பிரபல  சமையல்  கலைஞர்  இதில்   கலந்து  கொண்டு   சிறப்பிக்கின்றனர்.


அரை  மணி  நேரத்தில் எல்லா   செய்திகளும்!

 சத்தியம்    டிவியில்   ‘20 - 20 செய்திகள்’  திங்கள்  முதல் சனி  வரை  இரவு  8  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.    ஸ்டெல்லா  மேரி  தொகுத்து  வழங்குகிறார்.

        தினமும்  நடக்கும்  அன்றாட  நிகழ்வுகளை ஒன்றுவிடாமல்  நேயர்களிடம்  சேர்க்கிறது  இந்த  நிகழ்ச்சி.  தமிழகம், இந்தியா, உலகம்,  வணிகம், விளையாட்டு  என  அனைத்து  செய்திகளின்  தன்மையை  ஆராய்ந்து  ஒன்றுவிடாமல்  சேர்ப்பதோடு,   அரை  மணி  நேரத்தில்  உலகம்  முழுவதும்  நடக்கும்  நிகழ்வுகளையும்  அறிந்து  கொள்ளும்  வகையில்  செய்திகளை  வழங்குகிறது.    ராஜ்   டிவியில்   “நாகம்மா!”  புராண  சீரியல்!

   லட்சுமி  மகள்   ஐஸ்வர்யா  டைட்டில்  கேரக்டரில்   நடிக்கும்  “நாகம்மா” புராண சீரியல்,   ராஜ்  டிவியில்   திங்கள் முதல்  வெள்ளி  வரை  மாலை  6.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.   தென்னிந்தியர்களிடம் மிக  பிரபலமான  புராண  தெய்வத்தை  அடிப்படையாக  கொண்டு  கதை  அமைக்கப்பட்டுள்ளது.

            மனித  மற்றும்  பாம்பு  வடிவங்களை  எடுக்கும் திறன்  தேவிக்கு  உண்டு.  இந்த  அவதாரங்கள்  மூலமாக   தன்  எல்லைக்குள் உள்ள  மக்களை  அவள்  பாதுகாத்து  வருகிறாள்.  இதனால்,  தீய  சக்திகள்  மூலமாக  அவளை  அழிக்க  முயற்சிகள்  நடக்கின்றன.  அதை  தொடர்ந்து  தீய  சக்திகளை  வீழ்த்தி  மக்களை  பாதுகாக்க  நாகம்மா  மேற்கொள்ளும்  திட்டங்கள்  அனைத்தும்  திகிலூட்டும் வண்ணம்  அமைந்திருக்கும்.     விழிப்புணர்வு   வாசகம்!

 ‘க்ரைம்   டைரி’  நியூஸ்  7  தமிழில்  மதியம்  1  மணிக்கும்  இரவு  8.30  மணிக்கும்  ஒளிபரப்பாகிறது.    தயாரிப்பு,  நிகழ்ச்சி  தொகுப்பு:  அங்கயற்கண்ணி.

      பதைபதைப்பூட்டும்   சம்பவங்கள்,  படிப்பினையூட்டும்  பின்னணிகள்,  அதிர்ச்சியூட்டும்  பழிவாங்கல்கள்  போன்ற  செய்திகளை  தேர்வு  செய்து  ஒளிபரப்புகிறது   இது.  தற்கொலை,  குழந்தைகள் -  பெண்களுக்கு  எதிரான  குற்றங்கள்  குறித்த  செய்திகள்  ஒளிபரப்பாகும்  போது  அந்த  குற்றங்களுக்கு  எதிரான  விழிப்புணர்வு  வாசகங்கள் ஒளிபரப்பப்படுவது  இதன்  சிறப்பு.
 கலர்ஸ்  தமிழ்  ‘காதலர்  தின’ சிறப்பு  நிகழ்ச்சியில் ஆதவன்,  சஞ்சனா   சிங்!

 ‘காதலர்  தின’த்தை  முன்னிட்டு   கலர்ஸ்  தமிழ்  அதன்  நேயர்களுக்கு  பல்வேறு  கலர்புல்லான  நிகழ்ச்சிகளை  வழங்கவிருக்கிறது.  

அப்படி,  நாளையிலிருந்து  ( பிப்.  13 )  திங்கள்   ( பிப். 15 )  வரை  லவ்  சப்ஜெக்டுகளை  கொண்ட  “இதயத்தை  திருடாதே,” “சில்லுனு  ஒரு  காதல்” ஆகிய   இந்த  இரண்டு  சீரியல்களும்  பலவித  கோணங்களில்  காதலை  வெளிப்படுத்தவிருக்கின்றன.  அது  மட்டுமல்ல,  பல்வேறு  சிறப்பு  நட்சத்திரங்களும்  இதில்   கலந்துகொள்கிறார்கள்.  “இதயத்தை  திருடாதே” புகழ்  காமெடி  நடிகர்  ஆதவன்,  “சில்லுனு  ஒரு  காதல்” புகழ்  சஞ்சனா  சிங்  ஆகியோர்  நேயர்களை  மகிழ்விப்பார்கள்.

  இது  குறித்து  ஆதவன்  சொல்லும் போது -  “தொலைக்காட்சி  என்பது  நடிகர்களையும்  ரசிகர்களையும் இணைக்கும் ஒரு சிறந்த  தளம்.  “இதயத்தை  திருடாதே”  எனக்கு  மிகவும்  மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும்  தருகிறது.  இந்த  சீரியலில்  சக  நடிகர்களுடன் நடிப்பது  எனக்கு  மிகுந்த  உத்வேகத்தை  தருகிறது.  இதில் ஒரு  சிறிய  கேரக்டரில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  என்  நடிப்பை  நேயர்கள்  நிச்சயம்  விரும்புவார்கள்  என  நம்புகிறேன்!” என்று  குறிப்பிட்டார்.


சஞ்சனா  சிங்  கூறியதாவது:-   “ “சில்லுனு  ஒரு  காத”லில்  ஒரு  சிறிய  கேரக்டரில்  நடித்திருப்பதில்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.   இதன்  மூலம்  எனக்கு    நல்லதொரு  அனுபவம்  ஏற்பட்டிருக்கிறது.  மேலும்,  திறமை வாய்ந்த  கலைஞர்களுடன் நடித்தது    நிஜமாகவும்  அதே  நேரத்தில்  ஒரு  கனவாகவும்  இரண்டுவிதமாக  உணர்ந்தேன்.   என்  நடிப்பு  ஆடியன்சை கண்டிப்பாக  மகிழ்விக்கும்  என்றும்,  அவர்கள்  மத்தியில் எனக்கு  ஒரு நல்ல  பெயரை  ஏற்படுத்தும்  எனவும்  உறுதியாக  நம்புகிறேன்.”  
Trending Now: