நெல்லையில் பாஜகவினர் கன்னியாகுமரி காவல்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

19-06-2021 09:00 PM

கன்னியாகுமரி மாவட்ட பாரதியஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறையைக் கண்டித்து, நெல்லையில் பாரதியஜனதா கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே  அனுமதி இன்றி கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டு வருவதாகவும் , இதனைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் திருவெட்டாரு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர் . அப்போது அவர்களை போலீசார் அவதூறாக பேசி , கைது செய்துள்ளனர் . அவர்களை விடுவிக்க கோரியும் , அனுமதி இல்லாமல் தேவாலயம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது.

 இதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மகராஜன் தலைமையில் நெல்லை வண்ணார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையைக் கண்டித்தும் , அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர் . இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Trending Now: