திண்டுக்கல்லில் ஆறாத துயரத்தில் துப்புரவு பணியாளர்கள்

28-11-2021 05:28 PM

திண்டுக்கல்:


திண்டுக்கல் மாநகராட்சி ரோடுகளில் ஆறாக தண்ணீர் ஓடியபோதும், ஆறாத துயரத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளனர் என்பது  வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கொதித்து எழுந்து உள்ளனர்.

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்பதற்கு உதாரணமாக நமது வீடுகளில் உள்ள குப்பைகளை எல்லாம் அகற்றி சுகாதாரம் என்னும் சுத்தத்தை நமக்குத் தருபவர்கள் துப்புரவு தொழிலாளர்கள்.

திண்டுக்கல் மாநகராட்சி 1 வது வாா்டு பி வி தாஸ் காலனி  மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்பு பகுதியாகும்.

ஆனால் இன்று வரை  முறையான அடிப்படை வசதி கூட இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் இங்கு இருக்கும் மக்கள் திண்டுக்கல் மாநகராட்சியில் ஊா் முழுவதும் இருக்கும் குப்பைகளை அகற்றி  தூய்மை பணி செய்கிறாா்கள். தூய்மைப்படுத்தும் அவர்கள் இருப்பிடம் தூய்மை இல்லாமல் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் ,தெருவிளக்கு, கழிப்பறை வசதி எதுவும் இல்லாமல் அவதிப்படும் துப்புரவு தொழிலாளர்களுக்கு துயரம் இனியும் தீருமா என்ற கேள்வி சமூக ஆர்வலரிடம் எழுந்து நிற்கிறது.


இவா்களின் நிலையில் மாற்றம் என்பது இல்லாமல் இன்று வரை இதே நிலையே நீடிக்கின்றது.

இதை தமிழா் விடுதலை முண்ணனி வண்மையாக கண்டிக்கின்றது. துயரத்தில் பிறந்த துயரத்தில் வாழும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வில் துயரம் நீக்கி தூய்மை ஏற்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Trending Now: