திருமணமான 15 நாளில் காதலனுடன் ஓடிப்போன இளம்பெண்

28-11-2021 05:07 PM

கோவை,


கோவை துடியலூர் தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம என்பவரின் மகன் குணசேகரன்(28).

சொந்தமாக தொழில் செய்து வரும் இவருக்கு கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த திவ்யா (22 )என்ற பெண்ணுக்கும் கடந்த 11ம் தேதி மைசூர் மாவட்டத்தில் உள்ள தொட்டபுரா கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு கோவை துடியலூர் பகுதியில்  உள்ள கணவர் வீட்டில் திவ்யா வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குணசேகரன் தனது  தந்தையை அவரது ஒர்க்ஷாப்பில் கொண்டு விட்டு செல்வதற்காக சென்றார். மீண்டும் வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் திரும்பி வந்தார்.


அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி திவ்யா காணாமல் போயிருந்தார். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து குணசேகரன் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார். மேலும் திவ்யாவுக்கு திருமணத்திற்கு முன்பு அவரது சொந்த கிராமத்தில் வேறு ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்ததாக புகாரில் கூறியுள்ளார். எனவே அந்த நபருடன் திவ்யா ஓடிப்போய் இருக்கலாம் என்றும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 15 நாளில்

 கணவனை விட்டு விட்டு காதலனுடன் இளம்பெண் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: