நெல்லை - பாளையங்கோட்டையை இணைக்கும் 179 ஆண்டுகள் பழமையான ஆற்று பாலத்தின் பிறந்த தின விழா கொண்டாட்டம்

27-11-2021 07:46 PM

நெல்லை,  


நெல்லை மற்றும் பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில் செயல்பட்டுவரும் 179 ஆண்டு பழமையான ஆற்று பாலத்திற்கு பிறந்த தின விழாவை சமூக அமைப்புகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடின.

பாலத்தின் 179வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாலம் முழுதும் பார்ப்போர் கண்கவறும் வகையில் பலவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


நெல்லை மாவட்டத்தில் இருக்கும் இரு பெரு நகரங்களான நெல்லை மற்றும் பாளையங்கோட்டைக்கு இடையே பாய்ந்தோடி வரும் தாமிரபரணி நதிக்கு மேல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிரஸ்தாராக பணியில் இருந்த சுலோட்சன முதலியார் என்பவரது தனி மனித நன்கொடையினால் 1843ம் ஆண்டு 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 வளைவுகள், அவற்றைத் தாங்க இரட்டைத் தூண்களுடன் லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தின் வடிவமைப்பை போன்று கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டவரப்பட்டது.178 ஆண்டுகள் கடந்தும் பெருவெள்ளம்,மழை,வெயில்,பல லட்சம் வாகனங்கள் கடந்து சென்றது போன்றதையெல்லாம் தாங்கி கம்பீரமாக காட்சியளிக்கும் சுலோட்சன முதலியார் பாலம் கட்டி திறக்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில் நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள பாலத்தின் முகப்பில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாலம் கட்ட தனி மனித கொடையளித்ததை கெளரவிக்கும் வகையில் சுலோச்சன முதலியாரின் நினைவாக 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட 2 கல்தூணுக்கு நெல்லை மாவட்ட சமூக அமைப்புகள் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் சுலோச்சன முதலியாரின் 6 ம் தலைமுறை வாரிசுகள் கலந்துகொண்டு அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.இந்த நிலையில் தனி மனித கொடையால் உருவான சுலோட்சன முதலியார் பாலத்தின் 179 வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுலோச்சன முதலியார் பாலம் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து இரவு முழுதும் சுலோட்சன முதலியார் பாலம்  பலவண்ணங்களில் கண்கவரும் வகையில் ஒளிர்ந்தது. இதனை சாலைகளில் செல்வோறும்,வாகனங்களில் செல்வோரும் பார்த்து சென்றனர்.Trending Now: