அமல்ராஜ், ஐபிஎஸ் எழுதிய நூல்கள் கவிஞர் மு. மேத்தா தலைமையில் வெளியீட்டு விழா

16-10-2021 11:09 AM

சென்னை

அமல்ராஜ், ஐபிஎஸ் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா கவிஞர் மு. மேத்தா தலைமையில் சென்னையில் நேற்று (15-10-202) நடைபெற்றது

காவல்துறை கூடுதல் இயக்குநர் ஐபிஎஸ் அதிகாரி அமல்ராஜ் எழுதிய போராடக்கற்றுக் கொள், சிறகுகள் விரித்திடு ஆகிய இரண்டு நூல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன.

கவிஞர் மு. மேத்தா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார்.

திருச்சி எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரிகளின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும் சிந்தனைக் கவிஞருமான கவிதாசன், முன்னாள் காவல்துறை எஸ்பி கலியமூர்த்தி, அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

திருச்சி ஈவேரா கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் சங்கரநாராயணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவை விஜயா பதிப்பகம் சிதம்பரம், சிவஞானநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.Trending Now: