நவராத்திரி 9ம் நாள்: மீனாட்சிஅம்மன் சடை அலம்புதல் திருக்கோலத்தில் வண்ண மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

15-10-2021 09:49 PM

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 7ம் தேதி அன்று தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

நிலையில், ஒன்பதாம் நாளான இன்று கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சடை அலம்புதல் திருக்கோலத்தில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு கோவிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.Trending Now: