பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி திருக்கோவில் விஜயதசமியை முன்னிட்டு பரி வேட்டை நிகழ்ச்சி

15-10-2021 07:10 PM

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி திருக்கோவில் விஜயதசமியை முன்னிட்டு பரி வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் மிகப்பழமை வாய்ந்ததாகும்.  இத்திருக்கோவிலில் மூலவராக வேதநாராயணா்  மூல விமானத்தில் அழகிய மன்னார் உற்சவராக ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலன் என 3 நிலைகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். புரட்டாசி நவராத்திரியில் வரும் விஜயதசமியில் சுவாமி குதிரையில் பரி வேட்டைக்குச் செல்வது வழக்கம். பரிவேட்டை நிகழ்ச்சியானது மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழவும்  நல்ல மழை பெய்ய வேண்டியும் நடைபெறுகின்றது.இதற்காக இன்று காலை மகாமண்டபத்தில் மஞ்சள் திரவியம் பால் தயிர் தேன் இளநீர் பன்னீர் சந்தனம் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியிடம் வில் அம்பு சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வில் அம்புகளுடன்டன் பட்டாச்சாரியார் திருக்கோயில் வெளியே அமைந்துள்ள முற்றத்தில் சுவாமியின் சார்பாக நான்கு திசைகளிலும் அம்பினை ஏவினாா். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.  கொரோனா  காரணமாகவும் அரசாங்க வழிகாட்டுதலின் படியும் இந்த நிகழ்வு திருக்கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.Trending Now: