நபிகள் நாயகத்தின் மீது 100 கோடி ஸலவாத் ஓதும் நிகழ்ச்சி: காயல்பட்டினத்தில் நாளை நடக்கிறது

01-10-2021 03:21 PM

தூத்துக்குடி

நபிகள் நாயகத்தின் மீது 100 கோடி முறை ஸலவாத் ஓதும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நாளை (2.10.2021) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு மற்றும் மஸ்ஜித் ஜீலானி பள்ளிவாசல் சார்பில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்துகின்றனர்.

காயல்பட்டினம், பஞ்சாயத்து ரோட்டில் உள்ள மஸ்ஜித் ஜீலானியில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஜீலானி பள்ளிவாசல் முத்தவல்லி ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்குகிறார். ஹுசைன் முஸ்தபா ‘கிராஅத்’ ஓதுகிறார். முஹம்மது ஷமீம் கீதம் இசைக்க, காயல் ஜெஸ்முதீன் வரவேற்புரை வழங்குகிறார். மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது அன்வாரி துவக்கவுரை ஆற்ற மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லுாரி பேராசிரியர் முஹம்மது அஸ்பர் அஷ்ரபி சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொள்கின்றனர்.Trending Now: