மேலூர் பகுதியில் கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டிய இருவர் கைது

25-09-2021 02:51 PM

மதுரை மாவட்டம் மேலூர் அருகே புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் ஹரிகரன், இவரும் இவருடைய நண்பரான நடேஷும் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருக்கும் போது, அங்கே வந்த மேலூர் கடலைக்காரர் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவர், கத்தியைக் காட்டி மிரட்டி ஹரிகரன் வைத்திருந்த ரூபாய் 200 பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.  

இதுகுறித்து ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் ராமரை கைது செய்து மேலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர், அதேபோல் மேலூர் பேருந்து நிலையம் அருகே, சுந்தரிடவர் செல்லும் சாலையில், கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டியும், போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Trending Now: