மேலூர் பகுதியில் சிறு மழைக்கே ஒழுகும் அரசு பேருந்துகள்; புதிய பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

24-09-2021 08:00 PM

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன, இந்த கிராம பகுதிகளுக்கு மேலூர் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் தங்களுடைய கல்விக்கும், போதுமக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பல பேருந்துகள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் பேருந்துகள் செல்லும் வழியில் பாதியில் பழுதாகி நின்று விடும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வரும் நிலையில், மேலூர் அருகே ரெங்கசாமிபுரம் வழியாக மேலூர் பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்து, மழையின் காரணமாக முழுவதுமாக ஒழுக தொடங்கியுள்ளது.

 இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நனைந்தபடியே பயணம் செய்தும், சிலர் பேருந்து உள்ளே குடை பிடித்தபடியும் பயணம் செய்ததுடன், இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர், மற்றும் நடத்துனரிடம் கேள்வி எழுப்பியபடி பயணத்தை தொடர்ந்துள்ளனர்,

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது...

மேலூர் பகுதிக்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கல்வி, வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கினர், இந்நிலையில் மேலூர் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை உடைச்சலாகவும், முறையான பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதால், பல நேரங்களில் செல்லும் வழியில் பாதியில் நின்று விடுகின்றன, மேலும் மழை நேரங்களில் பேருந்து முழுவதும் ஒழுகி நனைந்துக்கொண்டே பயணம் செய்யும் நிலை உள்ளதால், நகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் நல்ல பேருந்துகள் போன்று கிராம பகுதிகளுக்கும் இயக்கபபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.Trending Now: