தடுப்பூசி செலுத்திய பெற்றோருக்கு திருக்குறள் மற்றும் உடல் நலம் பேணும் புத்தகங்கள் பரிசு - பள்ளி நிர்வாகம் ஊக்குவிப்பு

24-09-2021 07:53 PM

தடுப்பூசி செலுத்திய பெற்றோருக்கு திருக்குறள் உடல் நலம் பேணும் புத்தகங்களை பரிசாக புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ளஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி நிர்வாகம் வழங்கிமாணவ, மாணவிகளிடையே தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கொரோனா  தாக்கத்தால் பள்ளி கல்லுாரி மாணவமாணவிகளின்கற்றல் கற்பித்தல் கடந்த  இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து  மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் அனைவரும் தடுப்பூசிகள் எத்துக்கொள்வதின் அவசியம் குறித்து  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி  தனது பள்ளியில் படித்து வரும் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளிடையே கொரோனா குறித்த  விழிப்புணர்வு நடவடிக்கைகள் கடந்த 2  ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக தடுப்பூசி குறித்து தனது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் மூலம் பெற்றோர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்கொண்டு வருகிறார். மேலும் தனது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதின் சான்றிதழ்களை பள்ளியில் வழங்கினால் அவர்களுக்கு திருக்குறள் மற்றும் உடல் நலம் பேணும் புத்தகங்கள் பரிசாக வழங்கி தனது பள்ளி இணையதளத்திலும்  பதிவேற்றம் செய்து வருவது பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி கூறியதாவது:

ஒவ்வொரு பள்ளியும் இப்படி பெற்றோர்களை ஊக்கப்படுத்தினால் நம் மாநிலத்தில் கொரொனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்ற முடியும், அதற்கு என்னால் ஆன சிறு பங்களிப்பே  இந்தப் பரிசுகள். விரைவில்  எனது பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் நூறு சதவிகிதம்  தடுப்பூசி செலுத்தி இருப்பதை  உறுதிப்படுத்த முடியும் என்றார்.Trending Now: