வயது முதிர்வு காரணமாக கோயில் காளை இறப்பு; கண்ணீர் மல்க அடக்கம் செய்த கிராமத்தினர்

01-08-2021 07:46 PM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே  செவரக் கோட்டை கோவிலுக்கு சொந்தமான காளையை கிராமத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் , கோயில் காளை வயது முதிர்வின் காரணமாக இன்று இறந்தது. இதனையடுத்து கிராமத்தினர் ஒன்று கூடி  கண்ணீர் மல்க ,மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, தீபாராதனை செய்து மேளதாளங்கள் முழங்க அஞ்சலி செலுத்தி பின்னர்வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்தனர். மேலும்,மஞ்சுவிரட்டிற்கு  சென்ற இடமெல்லாம் பிடிபடாமல் தங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த கோயில் காளை இறந்ததை தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் கிராமத்தினர் துக்கம் அனுஷ்டித்தனர் .Trending Now: