கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாரம் - ஆட்சியர் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

01-08-2021 07:27 PM

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கொரோனா தொற்று மூன்றாவது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகின்றது அதன்படி தென்காசி மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு வாரம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை வெளியிட்டார். பின்னர் தினசரி சந்தையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முன்னிலையில் சுகாதார துறை அதிகாரிகள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.Trending Now: