பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு

18-07-2021 03:45 PM

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புன்னை நகரைச் சேர்ந்தவர் துரை(35) இவர்  குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை  வழக்கில் தண்டனைக் கைதியாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 மூச்சுத்திணறல் காரணமாக நெல்லை அரசு  மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இன்று அதிகாலை  துரை உயிரிழந்தார் . இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Now: