நெல்லை அருகே திமுக இளைஞரணி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் , உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் , பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

01-03-2021 06:49 PM

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே திமுக இளைஞரணி நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மைக்குற்றவாளிகளை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர் .

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேரந்த நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த செல்லத்துரை என்பவர் கடந்த 18-ந்தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் . இந்த சம்பவத்தில் இதுவரை ஐயப்பன் என்ற ஒரு நபர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார் . மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்படாமல் உள்ளனர் .உடனடியாக அவர்களைக் கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனைச் சந்தித்து மனு அளித்தனர்  பின்னர் அவர்கள் கூறுகையில்  கொலை சம்பவம் நிகழ்ந்து 10 தினங்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை , மேலும் முதல் தகவல் அறிக்கையில், ராதாகிருஷ்ணன் , முத்துக்குமார் , மாரியப்பன் , ஆதிமூலம் , கணேசன்  ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் இருந்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை , எனவே உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளோம் . இதனையடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதுரை உயர்நீதிமன்ற கிளையை அனுகி சிபிசிஐடி விசாரணை கோர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் . நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்துள்ளனர்Trending Now: