மனைவிக்கு பதிலாக பக்கத்து வீட்டு பெண்ணை அழைத்தவருக்கு அடி உதை

01-03-2021 05:24 PM

சிறுமுகை அடுத்த பழையூர் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மகன் சிவப்பிரகாசம் (33). இவர் கூலி வேலை செய்து வருகிறார். 

இவரது மனைவி அனு மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் .இவரது வீட்டின் அருகில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் மகன் தர்மராஜ் (22) என்பவர் தனது மனைவி அனு உடன் வசித்து வருகிறார். மனைவியின் பெயரும் அனு என்பதால் அவ்வப்போது தங்களது மனைவியை அவர்கள் அழைக்கும் பொழுது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிவப்பிரகாசம் தனது மனைவிக்கு போன் மூலம் அழைத்து பேசுவதற்கு தவறுதலாக தர்மராஜ் மனைவி அனுவிற்கு அழைத்து பேசியுள்ளார் . இதையடுத்து தர்மராஜ்க்கும் சிவப்பிரகாசதுக்கும் இடையே தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்று இதுகுறித்த தகவலை தனது தந்தை சதாசிவம் (50),மற்றும் சகோதரர் பழனிச்சாமி(24) இடம் தர்மராஜ் கூறினார் .பின்னர் மூவரும் சிவப்பிரகாசதிடம் சென்று எதற்காக தர்மராஜ் மனைவி அனுவை கூப்பிடுகி றாய் என பேசியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பு ஏற்பட்டு  ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர் . இதில் சிவப்பிரகா சத்திற்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிவப்பிரகாசம் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தர்மராஜ் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவர் தப்பிச் சென்றனர். சதாசிவம்(50) என்பவரை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Trending Now: