கொரானா கால தற்காலிக மருத்துவ பணியாளர்கள் பணி நிறுத்தம் - மீண்டும் பணியில் அமர்த்த ஆட்சியரிடம் கோரிக்கை

01-03-2021 05:09 PM

சிவகங்கை,

மருத்துவக் கல்லூரியில் கொரானா கால தற்காலிக மருத்துவ பணியாளர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

சிவகங்கை மாவட்ட  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா காலத்தில் 28 மருத்துவ பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, பணி புரிந்து வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரானாவிற்காக சிறப்பு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

இதில் 4 மருத்துவர்கள், 15 செவிலியர்கள், 9 பல்நோக்கு பணியாளர்கள் என 28 பேர்  நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் பதவி காலம் பிப்ரவரி 26 ஆம் தேதியோடு நிறைவடைந்ததை அடுத்து, மே மாதம் வரை பணி நீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தங்களை மட்டும் பணியிலிருந்து மருத்துவ நிர்வாகம் விடுவித்து விட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களை மீண்டும் பணியில் அமர்த்த கோரி கோரிக்கை மனு அளித்தனர். 

கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.Trending Now: