நெல்லை அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டி படுகொலை , பதட்டம்

28-02-2021 09:03 PM

நெல்லை கேடிசி நகர் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் . இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் . மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள இந்திரா நகர் கேடிசி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நிலம் வாங்க விற்கும் ரியல் எஸ்டேட் புரோகர் தொழில் செய்து வருகிறார் . இந்நிலையில் இரவில் இருசக்கர வாகனத்தில் நடுவக்குறிச்சி அருகே உள்ள பானுமதி நகருக்கு சென்றுள்ளார் . அப்போது ஊரின் வெளிப்புறத்தில் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார் . இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா. அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் கொலையாளிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர் .Trending Now: