நெல்லை சுகாதாரத்துறையில் மாத வாடகைக்கு ஒடும் கார்களுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்க 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை இயக்குனர் ஓட்டுனர் கைது

26-01-2021 09:28 AM

நெல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓடும் வாடகைக்கார்களின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை இயக்குனரின் ஓட்டுனரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர் . துணை இயக்குனர் விடுமுறையில் உள்ளதால் அவரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கூறியுள்ளனர் .

நெல்லை குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் . இவர் தனது இரண்டு கார்களை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் செயல்பட்டு வரும் சுகதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு விட்டுள்ளார் . வருடம் தோறும் ஒப்பந்தத்தை புதிப்பிக வேண்டும் . இந்நிலையில் இந்த ஜனவரி மாதத்தில் ஒப்பந்தத்தை புதிப்பிப்பதற்காக வேலாயுதம் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் .

 இந்நிலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஓட்டுனராக பணியாற்றும்  சங்கர் என்பவர் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க இரண்டு கார்களுக்கு கார் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் . இதனையடுத்து பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட வேலாயுதம் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார் . இதனையடுத்து போலீசாரின் அறிவுத்தல்படி ரசாயணக்கலவை தடவிய பணத்தை கொடுப்பதற்காக சங்கரை வேலாயுதம் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அவர் அங்கு இல்லை , செல்பேசியில் அழைத்த போது சங்கர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கி முன்பு நிற்பதாக தெரிவித்து அங்கு வருமாறு கூறியுள்ளார் . வேலாயுதம் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் அங்கு சென்றார். வங்கி அருகே சென்றதும் பணத்துடன் வேலாயுதம் மட்டும் சென்று சங்கரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த துணை கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையில் மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர் . உடனடியாக அருகில் இருந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் . அப்போது அவர் தனது அதிகாரியான சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் தான் பணம் வாங்க சொன்னதாகவும் , இதற்கு முன்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட கார்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் தற்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் விடுமுறையில் சென்னை சென்றுள்ளார்  . இந்த விசாரணையைத் தொடர்ந்து சுகாதாரத்துறை துணை இயக்குனரையும் போலீசார் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளானர் . அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் அவருக்கு தொடர்பு உள்ளதா என தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசுதுறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: