போலி இன்சூரன்ஸ் தயாரித்து வழங்கிய நெல்லை ஆசாமி உள்பட சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது: திடுக்கிடும் தகவல்கள்

26-01-2021 09:26 AM

சென்னையில், ஆன்லைன் மூலம் போலி இன்சூரன்ஸ் தயாரித்து வழங்கிய நெல்லை ஆசாமி உள்பட 5 பேர் கும்பலை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் பெறும் முறையான ஆவணங்கள். உரிமங்கள் உள்ளிட்டவை அனைத்தையும் அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே இயக்கி வந்தனர். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு கிடைக்கும் வகையில் இருந்ததால் இதன் பயன்பாட்டு அதிகமாயின

. இதில் முக்கியமாக வாகன இன்சூரன்ஸ் பதிவு செய்தல் மற்றும் ஆவணங்கள் சேகரித்தல் போன்றவை காப்பீடு நிறுவனங்களால் ஆன்லைன் மூலமாக செயல்படுத்தப்பட்டன. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திய மோசடி கும்பல் ஒன்று வாகனக் காப்பீட்டு பயனீட்டாளருக்கு உதவி செய்வது போல் செல்போனில் பேசி மோசடியில் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் வாகன இன்சூரன்ஸ் பதிவு செய்து தருவதாகவும், அதற்கான ஆவணத்தை எளிதாக பெற்று தருவதாகவும் நம்ப வைத்து அந்த கும்பல் மோசடியாக பணத்தை பெற்றுள்ளனர். மேலும் போலியான வாகன காப்பீட்டு ஆவணத்தை கொடுத்து இந்த கும்பல் பலரை தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம்  காப்பீட்டு நிறுவனம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் தேன்மொழி சைபர்கிரைம் குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர்கள் துரை, வீராசாமி ஆகியோர் தலைமையில் அது தொடர்பாக விசாாரணை நடத்தினர். போலி இன்சூரன்ஸ் மூலம் பெறப்பட்ட பணம் யாருடைய வங்கிக்கணக்கில் சென்றது குறித்து ஆய்வு செய்த போது அது நெல்லையைச் சேர்ந்த சுமதி என்ற பெண்ணின் வங்கிக்கணக்கு என்பது தெரியவந்தது. சுமதியை கைது செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் அவருக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நெல்லை டவுணைச் சேர்ந்த பிகாம் பட்டதாரி மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.

 அவருக்கு உதவியாக நெல்லையைச் சேர்ந்த சுமதி மற்றும் காப்பீடு ஏஜென்ட் ஆனந்த் என்பவரும் புதுக்கோட்டை மற்றும் கீரனூர் பகுதியை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளான அன்சார் அலி, ஜெயின் அலாவுதீன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் செயல்பட்டு வருவது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் மோசடி கும்பல் தலைவன் மாரியப்பன் மற்றும் அவரது ஏஜென்ட் ஆனந்த் (40) என்பவரை கைது செய்தனர்.

மாரியப்பனிடம் இருந்து போலி இன்சூரன்ஸ் தயாரித்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள், செல்போன், லேப்டாப் மற்றும் ரொக்கத்தொகை ரூ.9 லட்சத்து 54 ஆயிரத்து 910 மற்றும் 133 பவுன் தங்க நகைகள், ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலி இன்சூரன்ஸ் தயாரித்துக் கொடுத்து அதன் மூலம் மாரியப்பன் சம்பாதித்த ரூ. 3 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் மாரியப்பனுக்கு அலுவலக உதவியும், வங்கிக்கணக்கு மற்றும் லேப்டாப் மூலம் மோசடி செயலுக்கு உதவிய சுமதி (வயது 29) என்பவரும் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ஒரு செல்போன், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு பிரிண்டர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போலீஸ்கமிஷனர் பேட்டி:– இந்த மோசடி கும்பல் கடந்த  4ஆண்டுகளாக இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளனர். கைதான  நெல்லை சுமதி போலி பாலிசிகளை தயாரித்து கொடுத்துள்ளார்.  பொதுமக்கள் இது போன்ற கும்பல்களிடம் கவனமாக செயல்பட்டு அவர்களிடம் சிக்காமல் இருக்க வேண்டும். சமூக வலைதளம் மூலமாக வாகன காப்பீட்டு ஆவணம் பெற்றுள்ள அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகன காப்பீட்டு ஆவணத்தின் உண்மை மற்றும் நம்பகத் தன்மை குறித்து அந்தந்த காப்பீட்டு நிறுவன அலுவலகம் அல்லது இணைய தளம் மூலமாக பரிசோதித்த பிறகே பாலிசி எடுக்க வேண்டும்.

 கைதான மாரியப்பன் ஏற்கனவே இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.இவர் 300 பாலிசிகள் போலியாக கொடுத்துள்ளார்.  ஆன்லைன் சீன செயலி கந்து வட்டி வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில் பல தகவல்கள் கிடைத்துள்ளது. 2 வழக்குகளை பதிவு செய்துள்ளோம். ஆன்லைன் மூலம் சூதாட்டங்கள் நடைபெறும் செயலிகளை நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்" என்று கூறினார்.Trending Now: