சீரான குடிநீர் வழங்க வேண்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!!

25-01-2021 07:52 PM

திருப்பூர் மாநகராட்சியை ஒட்டிய பகுதியான ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சர்க்கார் பெரியபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர் ஏராளமான பனியன் நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த சாய ஆலைகளும், சாய பொதுசுத்திகரிப்புநிலையம் உள்ளிட்டவைகள்  செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களில் வேலைசெய்யும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்களும் இந்த பஞ்சாயித்தில் உள்ள வாடகைவீட்டில் தங்கி வசித்து வருகின்றனர் இதனால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை என்பது தொடர் கதையாக இருந்து வருவருகிறது மேலும் இப்பஞ்சாயத்து பகுதிகளில் புதிய குடியிருப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது

இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சீரமைக்க திட்டமிட்ட ஊராட்சி நிர்வாகம் மந்திய மாநில அரசுகளின் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேல்நிலை தொட்டி, நிலமட்ட தொட்டிகள் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறது. இற்காக ஊராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளிலும் புதிய பைப்லைன் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது இதனால் கடந்த ஒருமாத காலமாக ஊராட்சிப்பகுதிகளில் குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் எஸ்.பெரியபாளையம் ஏசிஎஸ் மார்ட்டின் சிட்டி பகுதி மக்கள் சுமார் 50க்கும்  மேற்பட்ட பெண்கள் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சீரான குடிநீர் விநியோகிக்க பஞ்சாயித்து நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் எனக்கோரி தங்களது கோரிக்கையை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தண்ணீர்குழாய் பதிக்கிறோம் எனக்கூறி தார் ரோடு முழுவதையும் தோண்டி பைப் பதிக்கபட்டது ஆனால் தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிஉள்ளனர், பதித்த குழாய்களும் ஆங்காங்கே உடைந்து தண்ணீர் ரோட்டில் வீணாக செல்கிறது ஆனால் தெருக்களில் தண்ணீர் விநியோத்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது பொங்கல் பண்டிகைக்கும் கூட தண்ணீர் விநியோகிக்கவில்லை, பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டால் உரிய பதில் தராமல் தட்டிக்கழித்து வருகிறார். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லை எனில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு கடுமைான போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்Trending Now: