24-11-2020 10:25 AM
தேனி மாவட்டம் வடக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக உள்ள தங்க.தமிழ்செல்வன் தொலைக்காட்சிப் பேட்டியில் திமுக தோற்கும் என்று கூறியதால் தி.மு.க.வினரிடையே பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
தேனி மாவட்ட திமுக நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டது .இதில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டார். இவர் அதிமுகவில் இருந்த போது எம்எல்ஏ, எம்.பி., மாவட்ட செயலாளர் என்ற பொறுப்புகளை வகித்தார். தற்போது அதிமுக பிளவுபட்ட போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்தார்.
அதன் பின்பு தற்போது திமுகவில் இணைந்து தேனி மாவட்ட வடக்கு திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் .திங்கள்கிழமை அவர் ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக தோற்கும் என்று கூறினார். பிறகு திடீரென்று சுதாரித்துக்கொண்டு அதிமுக தோற்கும் என்று கூறினார். இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. செய்தி யாளர்களிடம் தெரியாம சொல்லிட்டேன் இதை அழித்து விடுங்கள் என்றார். இவரது பேச்சு வீடியோ சமூக ஊடக வலைத்தளங்களில் உடனடியாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.