ராமநாதபுரம் அருகே சர்ச்சைக்குரிய கல்வெட்டு அகற்றம்

18-10-2020 02:45 PM

ராமநாதபுரம், அக்.18

ராமநாதபுரம் அருகே அரசு நிதியில் கட்டிய ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தில் பதித்த சர்ச்சைக்குரிய கல்வெட்டு அகற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம்  பெரியபட்டினத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் அரசு நிதியில் கட்டப்பட்டுள்ளது. இன்று (அக்.18)  மாலை 4:30 மணியளவில்  திறக்கப்பட உள்ளது. அக்கட்டட கல்வெட்டில்  இஸ்லாமியர்களின் முதல் தலைநகரம் பெரியபட்டினம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்களின் வரிப்பணத்தில்  கட்டிய கட்டடத்தில் இஸ்லாமிய தலைநகரம் என குறிப்பிட அரசு  எவ்வாறு அனுமதித்தது.

கல்வெட்டு வைப்பதில் உள்ள பின்னணி,  உள்நோக்கம் தொடர்பாக விசாரித்து துரித  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி  பொதுச்செயலர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட  போலீசார்  அக்கல்வெட்டை  அகற்ற அறிவுறுத்தினர். இதன்படி அக்கல்வெட்டு அகற்றப்பட்டது. போலீசாரின் துரித நடவடிக்கைக்கு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் பாராட்டு தெரிவித்தன.Trending Now: