ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் கணவன் மனைவி பலி போலீசார் விசாரணை!!

01-10-2020 02:21 PM

திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பிணமாக கிடந்தனர். 

இதனைப் பார்த்த பொதுமக்கள் திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் திருப்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தாராபுரத்தை சேர்ந்த தங்கமுத்து அவரது மனைவி ராதாமணி என்பது தெரியவந்தது.

தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபரான இவர் தனது மனைவியுடன் அங்கிருந்து காரில் திருப்பூர் வந்துள்ளார்  ரயில்வே தண்டவாளம் அருகே காரை நிறுத்திவிட்டு இருவரும் தற்கொலை செய்துள்ளார்கள்

கடன் பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Trending Now: