நாங்குநேரி அருகே குடும்பத்தகராறில் வயதான தம்பதிகள் தற்கொலை, உடல்கள் காட்டுப்பகுதியில் இருந்து மீட்பு , போலீசார் விசாரணை

24-09-2020 07:18 PM

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே குடும்பத்தகராறில் வயதான தம்பதிகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடலும் காட்டு பகுதியில் இருந்து கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இளம்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன் (70) இவரது மனைவி செல்வமணி (64) கூலி தொழிலாளியான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . இருவருக்கும் திருமணமான நிலையில் அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஓரே வீட்டில் வசித்து வந்துள்ளனர் . இந்நிலையில் இவர்களது இரண்டாவது மகன் ராஜதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் . இதனிடையே இரண்டாவது மருமகளுக்கும் இவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமையும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வயதான தம்பதிகள் இருவரும் அன்றையதினம் வீட்டை வெளியில் சென்றவர்கள் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை . அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை .இந்நிலையில் இன்று  ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வயதான தம்பதிகள்  இறந்த நிலையில்  கிடப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் வந்து. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் சபாபதி தலைமையில் போலீசார் விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மூக்கன் . மற்றும் அவரது மனைவி செல்வமணி என்பது தெரியவந்தது. அவர்களின் உடலின் அருகிலேயே பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. பின்னர் கைப்பற்றிய உடல்களை உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தகராறில்  தற்கொலை செய்து கொண்டார்களா, வேறு ஏதும் காரணம் உண்டா என விசாரணை நடத்தி வருகின்றனர் .குடும்பத்தகராறில் வயதான தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: