மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

19-09-2020 05:48 PM

சேலம் 4 ரோடு பகுதியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சேலம் நான்கு ரோடு அருகே ராமகிருஷ்ணா சாலையில் உள்ள லக்ஸ்மி கிருபா அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சண்முகசுந்தரம் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறார். பிளாஸ்டிக் கதவு விற்பனை செய்து வரும் சண்முகசுந்தரத்தின் மனைவி வித்தேஸ்வரி(40) சற்று மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும்  உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் வித்தேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வித்தேஸ்வரி உயிரிழந்தார். மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்யும்  CCTV காட்சி நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.

 இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வித்தேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாநகரின் மத்தியில் குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் மன அழுத்தம் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Trending Now: